போகோஹரம் தீவிரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட பெண்களில் 214 பேர் கர்ப்பம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிரிக்க நாடான நைஜிரீயாவில் போகோஹரம் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல்களிலும், பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்துவதிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், சமீபத்தில் சாம்பிசா(Sambisa) வனப்பகுதியில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 234 பெண்கள் மற்றும் சிறுமிகளை ராணுவத்தினர் மீட்டனர்.
தீவிரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட பெண்களில் 214 பேர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களை பாலியல் தொழில் அடிமைகள் போல தீவிரவாதிகள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இதுகுறித்து ஐ நா. உணவுத் திட்ட நைஜீரிய செயல் இயக்குநர் பாபாடுன்டே ஓஷோடிமெஹின்(Babatunde Osotimehin) கூறியதாவது, ஏற்கனவே இப்பெண்களுக்கு எச்ஐவி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
214 பேர் கர்ப்பிணிகளாக உள்ளனர், சிலருக்கு கரு நல்ல வளர்ச்சி அடைந்த நிலையில் உள்ளது. சிலர் தற்போதுதான் கர்ப்பமுற்றுள்ளனர்.
அவர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில குழந்தைகளும் மீட்கப்பட்டு உள்ளது. அவர்கள் வனப்பகுதியில் பிறந்தவர்கள் ஆவர்.
இப்போதுதான் அவர்கள் வெளி உலகையே பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
-http://world.lankasri.com
21-ம் நூற்றாண்டில் வாழும் கற்கால மனிதர்கள்!