யேமனிலிருந்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியா மீது தொலைதூர எறிகுண்டுகள், ஏவுகணைகளைக் கொண்டு செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து சவூதி உள்துறை அமைச்சகம் சுட்டுரை (டுவிட்டர்) சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது:
நஜ்ரன் பகுதியில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏறிகுண்டுகளைக் கொண்டும், ஏவுகணைகளைக் கொண்டும் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நிகழ்த்தினர். இதில் 3 பேர் உயிரிழந்தனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனினும் உயிரிழந்தவர்கள் பொதுமக்களா, ராணுவத்தினரா என்பதை அமைச்சகம் குறிப்பிடவில்லை.
கிளர்ச்சியாளர்கள் வீசிய குண்டுகள் மருத்துவமனைகள், பள்ளிக் கூடங்கள், பொதுமக்களின் குடியிருப்பகள் மீது விழுந்ததாக (படம்) ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் முதல் தங்கள் மீது வான்வழித் தாக்குதல் நிகழ்த்தி வரும் சவூதி அரேபியாவில், மக்கள் வசிக்கும் பகுதியில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நிகழ்த்தியிருப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
-http://www.dinamani.com