அம்னோ ஒரு தேவாலயத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த கட்சி உறுப்பினர்களுக்கு விளக்கம் கேட்டுக் கடிதம் எழுதியுள்ளது.
தாமான் மேடானில் ஏப்ரல் 19-இல் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அம்னோ உறுப்பினர்களின் எண்ணிக்கை “ஐந்துக்கும் குறைவானது” எனக் கட்சித் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கூறினார்.
அவர்களுக்குக் கட்சி விளக்கம் கேட்டுக் கடிதம் அனுப்பியுள்ளதாக அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் ‘நீங்கள் என்ன செய்தாலும் இது பல்லின நாடு என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறோம். அம்னோ இப்படிப்பட்ட செயல்களைச் செய்வதுமில்லை, ஆதரிப்பதுமில்லை என்றும் சொல்லி இருக்கிறோம்”, என்றாரவர்.
தேர்தல் வரும்போது காக்காய் பிடிப்பார், காலையும் பிடிப்பார்!. நாளைக்குப் பின் பாருங்களேன் இவர்கள் செய்யப் போகும் கூத்து. மவனே நாளையில் இருந்துதான் இருக்கு உங்களுக்கு செருப்படி மற்ற எல்லா அடியும் வரப் போகுது. தென் மாநிலத்தின் சமஸ்தானதிபதியிடம் இருந்து மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விடப் படுகின்றது என்றால் ஏதோ ஒன்று தெற்கே இருந்து கிளம்பப் போகின்றது என்று அர்த்தம். யானை வரும் பின்னே மணி ஓசை வருது முன்னே!.
போடா தேங்கா !!!!!
அஹா என்ன நடிப்பு …. போதுமடா உங்கள் நாடகம். இந்த நாடகத்தை சொறிநாய் மஇகா மற்றும் எலும்புத்துண்டு கட்ச்யிடம் சொல்லுங்கள். மானம் ரோசம் இல்லாத இந்த மட ஜென்மங்கள் கேட்கும்.மக்கள் உங்கள் நாடகத்தை கிழித்தெறியும் நாள் வரும்.. பொறுத்திருங்கள்.
நல்லா நினவு உருத்துங்க. மத்தவுங்க்களே கைது பண்ணி கொடுமை படுத்துங்க.
ஆஹா என்ன அருமை பிள்ளையையும் கில்லி விட்டு தொட்டிலயும் ஆட்டுகிறான்கள்.
மலாயருக்கு மடல் எழுதுவீர்
,
மற்றவர்க்கு விளங்கு மாட்டுவீர்…!
நாம் பல்லின நாடு. உண்மைதான். சீனர்களும், இந்தியர்களும் பல் இல்லாதவர்கள் என்பதை அம்னோ உறுதிப்படுத்த வேண்டும்!