ஒரு மாபெரும் இன அழிப்பு நடைபெற்ற காயங்கள் இன்னமும் ஆறவில்லை ஆனாலும் ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன நேற்று நடந்ததைப்போல நெஞ்சத்தில் அந்த நினைவுகள் முட்களைப்போல நெருடிக்கொண்டிருக்கின்றன கண்ணைத்திறந்தாலும் மூடினாலும் அவலங்களின் அந்த நாட்கள்
கண்ணைவிட்டு அகலாது கண்ணுக்குள்ளேயே ஓடிக்கொண்டிருக்கின்றன .
அபிவிருத்தி என்றும் நல்லாட்சி என்றும் கூறியபடி சிங்கள தேசத்தின் சிம்மாசனத்தில் புதியவர் ஒருவர் இப்போது அமர்ந்துகொண்டுள்ளார் ஆனாலும் தமிழர்களின் நிலை என்ன? இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன?சிங்களதேசத்தின் கொடிய இனவெறி இரானுவத்தினால் படுகொலை செய்யப்பட்ட லட்சக்கனக்காண மக்களின் அழிவுக்கு நீதி கிடைக்குமா? வெள்ளிவிழா கண்டதமிழனின் இனவிடுதலைப்போராட்டம் நாளை என்னவாகும் ? தமிழினத்தின் தலைகள் நிமிருமா?அல்லது அவலங்கள் நீண்டுசெல்லுமா?
என பல நூறு கேள்விகள் ஒவ்வெருதமிழர்களின் மனங்களிலும் எழுகின்றது.
ஆனால் அதற்கான பதிலை கூறவேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள்நியாயமான தீர்வினைப்பெற்றுத்தரவேண்டிய தலைவர்கள் இன்று தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு பாரிய பிரச்சினையாக மாற்றம் பெற்றுக்கொண்டிருக்கின்றனர்
தமிழர்களின் பாதுகாவலர்களாக இருந்த விடுதலைப்புலிகள் முள்ளிவாய்க்காலிலே வீழ்ந்தப்பட்டதன் பிற்பாடு அனாதைகளாக்கப்பட்ட தமிழர்களுக்கு தமது இனவிடுதலைப்போராட்டத்தின் அடுத்த அத்தியாயம் என்ன என்ற கவலையும் வேதனையும் எழுந்தபோது ஓரளவு மனதுக்கு ஆறுதலாக அமைந்தது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஒன்று மட்டுமே அறிமுகம் இல்லாத ஆசாமிகள் என்றாலும் தமிழ்த்தேசியக்கூட்டமைபு என்று வந்தால் அள்ளி வழங்கினார்கள் தமது ஆதரவுகளை.
ஆனால் அதற்காக இன்று அந்த மக்களுக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் அதன்
தலைமைகளும் செய்யும் கைமாறு என்ன? தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்ற பெயரை வைத்து அரசியலுக்குள் அறிமுகமாகிய ஆசாமிகள் இன்று சிங்களத்தேசியத்தின் பால் தமிழர்களை ஈர்த்துச்செல்ல முற்படுவது இப்போது வெளிச்சதிற்கு வருகின்றது இந்த விடயத்தில் கூட்டமைப்பின்
தலைவர் சம்மந்தன் அவர்கள் உற்பட பின்வாசல் வழியே வந்த சுமந்திரன் போன்றவர்கள் தீவிரமான போக்கில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர் ஏன் என்று கேட்க எவரும் இல்லை என்ற தைரியத்தில் இரத்தம் தோய்ந்த ஈழபூமியை இனவாதப்பிசாசுகளிடம் அடகுவைத்து தமது
அரசியல் நலங்களுக்காக செயற்படுவது எந்த விதத்தில் நியாயமாகும்
மக்கள் நலம் மக்கள் நலம் என்று பேசி தமது மக்களின் நலனுக்காக ஒரு இனத்தின் எதிர்காலத்தினை எழுந்து நிற்கமுடியாத அளவு அதளபாதளத்தில் தள்ளிவிடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்பதற்கு பல மாவீரர்கள் பிறந்த ஈழ மண்ணில் பிறந்த இன்றைய இளைய சமுதாயம் தயாராக
இல்லை. மேய்ப்போன் இல்லாத மந்தைகளாக தடுமாறிக்கொண்டிருக்கும் தமிழினத்தினை மீட்க ஒவ்வெரு இளைஞனும் புதியதொரு அவதாரம்எடுத்துள்ளார்கள் விதைக்குள்ளே உறங்கிக்கொண்டிருக்கும் ஆலமரம் காலநிலை வருப்போது விருட்சமாக வியாபித்துக்கொள்ளும் மன்னுக்குள்
புதைந்து விட்டதால் விதைகள் எல்லாம் மரணித்துவிட்டதாக அர்தமாகுமா?
பூனையில்லா வீட்டின் எலிகளே ! எச்சரிக்கை எழுந்துகொன்டோம் இனவிடுதலைக்காக சிந்திச்சிதறிக்கிடந்தவன் எல்லோரும் ஒன்றுபட்டோம் “ஈழத்தமிழ் இளையோராக” .
எரிந்த இடத்தில் இருந்து எழுந்து பறக்கும் அக்கினிப்பறவைகளாக நாங்கள் ஈழமண்ணையும் மக்களையும் அடகுவைக்கும் அனைவருக்கும் இனி பேரிடியினைக்கொடுப்போம் போராட்டத்துக்கான கோரிக்கை நிறைவேற்றப்படாதவரைக்கும் போராளிகள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள் இது யதார்த்தம் ஒரு இனத்தின் விடுதலைக்காக போரடவேண்டிய பெறுப்பில் உள்ளவர்கள் அவர்களின் பிரச்சினைகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லவேண்டிய பொறுப்பில் உள்ள தலைவர்கள் அனுபவசாலிகள் என்றும் அறிவாளிகள் என்றும் தம்மைத்தாமே கூறிக்கொண்டு செய்யும் இழிவான செயல்களை ஒரு ஒப்பற்ற தலைமையின் கீழ் அந்த தலைமையின் தேசத்தில் வளர்ந் இன்றைய இளைய தலைமுறை எவ்வாறு பொறுத்துக்கொள்ளும் ஆதாரங்கள் ஏதும் இன்றி குற்றச்சாட்டுகளை இங்கே நாம் முன்வைக்கவில்லை.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உடைந்துவிடக்கூடாது மக்கள் மத்தியில் அதற்கு இருக்கும் நன்மதிப்பும் நம்பிக்கையும் வீணாகிவிடக்கூடாது எனவே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு களைஎடுக்கப்படவேண்டும்
அது சீர்செய்யப்படவேண்டும் எனவேதான் ஈழத்தமிழ் இளையோர் ஆகிய நாங்கள் தமிழ்த்தேசியத்தினை அடகுவைக்க நினைக்கும் ஆசாமிகளுக்கு ஒரு எச்சரிக்கையினே பகிரங்கமாக விடுகின்றோம் இன்று விடுதலை நாளை விடுதலை என்று நம்பி நம்பி காத்திருக்கும் எமது தமிழினத்தினை என்றுமே விடுதலை இல்லை என்ற நிலைக்குள் தள்ளிவிடவேண்டாம்
தாயகம் தேசியம் சுயநிர்னயம் என்று நீங்கள் மேடைகளில் வீரவசனங்கள் பேசுவதால் தான் மக்கள் உங்களை தெரிவுசெய்தார்களே தவிர நீங்கள் அறிவாளிகள் என்றோ அனுபவசாலிகள் என்றோ அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள் சிங்களத்தோடு இணக்க அரசியல் செய்ய முடியும் என்றோ
சிங்களவர்களோடு ஒன்றுபட்ட அரசின் கீழே வாழ முடியும் என்றோ நினைத்தால் நீங்கள் விரும்பினால் தமிழர்களின் அரசியலில் இருந்து ஓடிவிடுங்கள் உங்கள் பிள்ளைகளை சிங்களதேசத்திற்கு அனுப்பிவிடுங்கள் மாறாக தமிழ் அரசியலுக்குள் நின்றுகொண்டு அப்பவிகளான சில
இளைஞர்களையும் யுவதிகளையும் உங்கள் இழிவான அரசியலின் கறிவேப்பிலைகளாக பயன்படுத்தவேண்டாம். உங்கள் ஒரு சிலரின் விருப்பத்துக்கான ஒட்டுமொத்த தமிழினத்தையும் பிழையான பாதையில் கூட்டிச்செல்லவேண்டாம்
நீங்கள் விரும்பினால் சிங்களவர்களுடன் சம்மந்தம் செய்துகொள்ளுங்கள் “அபே லங்கா” என்று பச்சை குத்திக்கொள்ளுங்கள் ஆனால் தாயகம் தேசியம் சுயநிர்ணயம் என்ற வார்தைகளை பேசி தமிழர்களின் வாக்குகளை கொள்ளையடிக்கவேண்டாம் நீங்களாகவே தமிழ் அரசியலில் இருந்து ஒதுங்கி
விடுங்கள் மாறாக இவர்கள் என்ன செய்வார்கள் என்று மேலும் மேலும் இழிவான செயர்களை செய்வீர்களானால் அதன் விளைவு மிகவும் கடுமையானதாக இருக்கும் கடந்த மாதங்களில் கூட்டமைப்பின் சில உறுப்பினர்களின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன அது ஒரு எச்சரிக்கையாக
இருக்கும் என்று நம்பினோம் ஆனாலும் இழிநிலை தொடர்கின்றது இத்தோடு நிறுத்திவிடுங்கள் ஈழமன்ணின் விடிவுக்காக இரையாகவும் தயாயாரக இருக்கும் எமக்கு நீங்கள் இரையாகிவிடாதீர் இனியும் இனவிடுதலைக்கான பயணத்திற்கு உங்காளால் இடையூறுகள் ஏற்படுமாயின் இம்முறை
தேர்தலின் நீங்கள் எங்கு வாக்கு கேட்டு சென்றாலும் மாட்டுக்கழிவுகளால் தாக்கப்படுவீர்கள் எந்த மேடைகளில் நீங்கள் ஏறினாலும் செருப்பு மாலைகள் உங்களுக்கு அணிவிக்கப்படும் உங்கள் முகமூடிகளைக்கிழித்து மக்களுக்கு அடையாளம் காட்டுவோம் இது இறுதி எச்சரிக்கை
-ஈழத்தமிழ் இளையோர் அமைப்பு
-http://www.pathivu.com
மரணம் அடைந்த ஒவ்வொரு விடுதலை புலிகளின் தியாகத்தை மனதில் வைத்து கூட்டமைப்பின் உறுபினர்கள் செயல் பட வேண்டும் .இல்லையேல் ………………………..
இப்போது கொக்கரிப்பவந்தான் அன்று சிங்களனோடு சேர்ந்து அரசியல் செய்தான் ! இங்கு அம்னோவோடு சேர்ந்த ம இ கா போன்றுதான் !