ஐ.எஸ் தீவிரவாதிகளை அமெரிக்கா அழிக்குமா? களமிறங்கிய இளைஞர்கள்

isis_aginstyouth_001ஐ.எஸ். தீவிரவாதிகளை எதிர்த்து போரிடுவதற்காக 90 இளைஞர்களுக்கு அமெரிக்க ராணுவம் போர் பயிற்சி அளித்து வருகிறது.

கடந்த 8 மாதங்களாக சிரியாவிலும், ஈராக்கிலும் ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் வான்வழித் தாக்குதலையும் நடத்தி வருகிறது. எனினும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், அமெரிக்க ராணுவ தலைமையகமான ‘பென்டகன்‘(Pentagon) புதிய முயற்சி ஒன்றில் இறங்கி இருக்கிறது.

இதற்காக சிரியா நாட்டின் 90 இளைஞர்களைத் தெரிவு செய்து ஜோர்டான் நாட்டில் அவர்களுக்கு சிறிய ரக ஆயுதங்களை கையாள ராணுவ பயிற்சியும் அளித்து வருகிறது.

இவர்களுக்கு உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. போர்க்களத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையில் ஈடுபடுத்தப்படும்போது இவர்களுக்கு இன்னும் அதிக அளவில் உதவி செய்து தரப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் விரைவில் சிரியாவுக்கு சென்று தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து அமெரிக்க ராணுவ செயலாளர் ஆஷ்டன் கார்ட்டர்(Ashton Carter) கூறுகையில், முதல் கட்ட பயிற்சி சிறிய அளவில் அளிக்கப்பட்டு வருகிறது. எங்களுடைய இந்த முயற்சி வெற்றி பெறும் என்று நம்புகிறோம். அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்த பயிற்சி தொடரும் என்று கூறியுள்ளார்.

-http://world.lankasri.com