43 மாணவர்களை கொலை செய்து உடல்களை எரித்த கும்பல்: அம்பலமான உண்மை

43student_dead_001மெக்சிகோவில் 43 மாணவர்கள் மாயமான விவகாரம் தொடர்பாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் 26ம் திகதி, மெக்சிகோவின் தென்மேற்கு நகரான இகுவாலாவில்(Iguala ) ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் 43 பேர் மர்மமான முறையில் மாயமானார்கள்.

இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், பொலிசார்கள் சட்டவிரோதமாக அந்த மாணவர்களை கடத்திச்சென்று போதைப்பொருள் கடத்தல் கும்பலிடம் ஒப்படைத்துள்ளனர்.

அந்த கும்பல் மாணவர்கள் 43 பேரையும் கொலை செய்து, அவர்களது உடலை எரித்துள்ளது.

இந்த சம்பவம் மெக்சிகோவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக இகுவாலா மேயர் ஜோஸ் லூயிஸ் அபார்கா(Jose Luis aparka,), அவரது மனைவி மரியா(Maria) உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக இகுவாலா நகர பொலிஸ் துணைத்தலைவர் பிரான்சிஸ்கோ சல்காடோ வலாதர்ஸ்(Francisco Salgado Valladares) தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார்.

சம்பவத்தின் போது, 13 மாணவர்களை அந்த போதைப்பொருள் கும்பலிடம் ஒப்படைக்க இவர் உத்தரவிட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சகம் கூறியுள்ளதாவது, போதைப்பொருள் கும்பலை பாதுகாப்பதற்காக இவர் மாதந்தோறும் பெருமளவில் லஞ்சம் பெற்று வந்துள்ளார் என கூறியுள்ளது.

-http://world.lankasri.com