எனக்கு மரியாதை அளிக்கவில்லை: பாதுகாப்பு மந்திரிக்கு மரண தண்டனை விதித்த வடகொரிய அதிபர்

northkorea_punish_001வடகொரிய பாதுகாப்பு மந்திரிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி, விமான எதிர்ப்பு துப்பாக்கி மூலம் ஹியோனின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கொரிய உளவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

அங்குள்ள காங் கோன் ராணுவ அகாடமியில் நடைபெற்ற இந்நிகழ்வை வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேரில் பார்த்ததாக தென் கொரியாவின் தேசிய உளவுத்துறை நிறுவனத்தின் துணை இயக்குனரான ஹான் கி பியோம் கூறியுள்ளார்.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் மக்கள் ஆயுத படையின் மந்திரியாக நியமிக்கப்பட்ட ஹியோன், ராணுவ நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு மரியாதை அளிக்கவில்லை என்றும், அதிபரின் கேள்விக்கு முறையான பதில் அளிக்கவில்லை எனவும் கூறி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

-http://world.lankasri.com

https://youtu.be/yScrgbvrfR8

TAGS: