சிறுநீரைக் குடித்து உயிர்வாழும் அகதிகளின் அவலநிலை

rohnja_refugee_001சிறுநீரைக் குடித்து உயிர்வாழும் அவலநிலைக்கு ரோஹிஞ்சா அகதிகள் தள்ளப்பட்டிருப்பதாக அவர்களை நேரில் பார்த்த பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய வங்கதேசத்திலிருந்தும், மதக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட மியான்மரிலிருந்தும், மலேசியாவில் தஞ்சம் கேட்டு ஆயிரக்கணக்கான அகதிகள் செல்கின்றனர்.

மியான்மர், வங்கதேச நாடுகளிலிருந்து தஞ்சம் கேட்டு வந்த 800-க்கும் மேற்பட்ட அகதிகளை மலேசியா ஏற்க மறுத்ததால், அவர்கள் நடுக்கடலில் தத்தளித்து வருகின்றனர்.

தாய்லாந்து வழியாக மலேசியா செல்ல விரும்பும் அவர்களை சட்ட விரோதமான முறையில் கடத்தல்காரர்கள் படகு மூலம் அழைத்துச் செல்கின்றனர்.

இந்நிலையில், சட்டவிரோதமாக குடியேறும் அகதிகளின் எண்ணிக்கையை தடுப்பதற்காக மலேசியா, தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

அதன் காரணமாக, கடத்தல் படகுகளை ஓட்டி வந்தவர்கள் கைது நடவடிக்கைக்குப் பயந்து, ஆயிரக்கணக்கான அகதிகளை நடுக்கடலில் கைவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனால் உணவு, குடிநீர்ப் பற்றாக்குறையால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் அவதிப்படுவதாக மீட்கப்பட்ட அகதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அகதிகளின் அவல நிலையை நேரில் பார்த்த பிபிசி செய்தியாளர் ஒருவர் இதுகுறித்து கூறுகையில், தாய்லாந்து கடற்படையின் உதவியை எதிர்பார்த்துக்கொண்டு அதிகமான அகதிகள் காத்துக்கொண்டிருக்கின்றனர் என்றும் பசிக்கொடுமையால் சிறுநீரைக் குடித்து உயிர்வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் எனவும் கூறியுள்ளார்.

-http://world.lankasri.com