வன்முறையை தூண்டிய எகிப்து ஜனாதிபதி: மரண தண்டனை விதித்த நீதிமன்றம்

ezypt_mohammedmoris_001எகிப்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான முகமது மொர்ஸிக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

2011ம் ஆண்டு எகிப்து நாட்டின் ஜனாதிபதியாக Hosni Mubarak என்பவர் இருந்தபோது, வன்முறையை தூண்டிய காரணத்திற்காக முகமது மொர்ஸி உள்பட ஏராளமான போராட்டக்காரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆனால், சிறைக்கு சென்ற இரண்டே நாளில் சிறைச்சாலையை உடைத்துக்கொண்டு முகமது மொர்ஸியும், அவரது ஆதரவாளர்களும் தப்பினர்.

இந்த கலவரத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான சிறைக்கைதிகளும் தப்பினர்.

இதன் பின்னர், பல்வேறு போராட்டங்களை நடத்தி 2012ம் ஆண்டு ஜனநாயக முறைப்படி முதன் முதலாக எகிப்தின் ஜனாதிபதியாக பதவியேற்றார்.

பதவி ஏற்ற ஓராண்டிற்குள் மீண்டும் கலவரம் வெடித்ததால், ராணுவ தளபதியான Abdul Fattah al-Sisi, முகமதுவை ஆட்சியிலிருந்து நீக்கி சிறையில் அடைத்தார்.

2012ம் ஆண்டு ஆட்சியிலிருந்தபோது ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே கலவரத்தை தூண்டிய குற்றத்திற்காக கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி 20 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால், அப்போது சிறையிலிருந்து தப்பிய குற்றத்திற்கான தீர்ப்பு வழங்கவில்லை.

இன்று(16.05.15) வெளியாகியுள்ள அந்த தீர்ப்பில் 2011ம் ஆண்டு சிறை கலவரத்தை தூண்டியது, சிறையிலிருந்து தப்பியது உள்ளிட்ட குற்றங்களுக்காக முகமது மொர்ஸிக்கு மரண தண்டனை விதிப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எகிப்தி நாட்டின் உயரிய இஸ்லாமிய மத அமைப்பான Grand Mufti, இந்த மரண தண்டனை தீர்ப்பிற்கு ஆதரவு அளித்தால் தான் மரண தண்டனையை நிறைவேற்ற முடியும்.

எனவே, தீர்ப்பு குறித்த அனுமதி யூன் 2ம் திகதி கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எகிப்தி நாட்டு முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அவர்களது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்து முன்னாள் ஜனாதிபதி உட்பட 106 பேருக்கு மரண தண்டனை: சர்வதேச அளவில் வலுக்கும் எதிர்ப்பு

அரசுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட எகிப்து நாட்டு முன்னாள் ஜனாதிபதி உட்பட 106 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு சர்வதேச நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

2011ம் ஆண்டு சிறையிலிருந்த தப்பி கலவரத்தை தூண்டிய குற்றத்திற்காக எகிப்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான முகமது மொர்ஸி மற்றும் அவர்களது ஆதரவாளர்களான 105 பேருக்கு கெய்ரோ நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு சர்வதேச நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச மன்னிப்பு சபையான Amnesty நேற்று இத்தீர்ப்பிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்ததுடன், தீர்ப்பை ரத்து செய்யுமாறு எகிப்து அரசாங்கத்தை வலியுறுத்தியது.

மேலும், துருக்கி நாட்டு ஜனாதிபதியான Tayyip Erdogan-வும், கெய்ரோ நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக கண்டனங்களை தெரிவித்தது.

இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், எகிப்து நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த கவலை அளிக்கும் விதமாக உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார்.

மரண தண்டனை குறித்து எதிரான தங்களது நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், எகிப்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் 100க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு மரண தண்டனை அறிவித்துள்ளது சர்வதேச சட்டங்களுக்கு எதிராக உள்ளது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

முகமது மொர்ஸிக்கு மரண தண்டனை என தீர்ப்பு வெளியானவுடன், எகிப்து நாட்டின் பல பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது. எகிப்து நாட்டின் சினாய் பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 3 நீதிபதிகள் சுட்டு கொல்லப்பட்டதுடன் 3 நீதிபதிகள் படுகாயமடைந்தனர்.

நீதிமன்றம் விதித்த தீர்ப்பிற்கு எதிராக தான் சில அமைப்பினர் இந்த தாக்குதலை நிகழ்த்தி இருப்பதாக பொலிசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தாலும், எகிப்து நாட்டின் உயரிய மத அமைப்பான Grand Mufti, இந்த தீர்ப்பிற்கு அனுமதி அளித்தால் தான் மரண தண்டனையை நிறைவேற்ற முடியும்.

-http://world.lankasri.com