பிரித்தானிய நாட்டிற்கு தான் பிரதமராக இருக்கும் வரை, பிரித்தானியாவிலிந்து ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என பிரதமர் கேமரூன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
ஸ்காட்லாந்து நாட்டின் முக்கிய கட்சியான SNP, தனிநாடு கோரி ரகசிய வாக்கெடுப்பு நடத்த உள்ளதாக நேற்று பரபரப்பு தகவல்கள் வெளியானது.
இதனையடுத்து பிரித்தானிய பிரதமரான கேமரூன் நேற்று அவசரமாக ஸ்கொட்லாந்து தலைநகரமான Edinburgh நகருக்கு சென்று SNP கட்சியின் தலைவரான Nicola Sturgeon-யை சந்தித்தார்.
நிக்கோலாவின் தலைமை அலுவலகமான Bute House-ல் நடந்த இந்த சந்திப்பில், தனிநாடு கோரி நிக்கோலா நடத்தவிருந்த சட்டவிரோதமான வாக்கெடுப்பிற்கு அனுமதி அளிக்கமாட்டேன் என நிக்கோலாவை எச்சரித்தார்.
ஏற்கனவே கூறியது போல, ஸ்காட்லாந்து நாட்டிற்கு கூடுதல் அதிகாரங்களை பகிர்ந்து அளிப்பேன் என அவர் உறுதிபட கூறியுள்ளார்.
தற்போதைய Devolution Bill எனப்படும் அதிகார பகிர்வு மசோதாவை தயாரிக்கும் பணி முடிவடைந்துள்ளதால், ஸ்கொட்லாந்து நாட்டிற்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக கேமரூன் தெரிவித்துள்ளார்.
ஸ்கொட்லாந்து மக்களிடம் பேசிய கேமரூன், ஒட்டுமொத்த பிரித்தானியா தேசமும் ஸ்காட்லாந்து நாட்டிற்காக தான் பாடுபட்டு கொண்டிருக்கிறது. உங்களுடைய ஓய்வூதியம், வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்க பிரித்தானியா என்றும் துணை நிற்கும். எனவே, பிரித்தானிய மற்றும் ஸ்கொட்லாந்து என்றும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் கேமரூன் வலியுறுத்தியுள்ளார்.
கேமரூனின் முடிவிற்கு பதலளித்த SNP கட்சி தலைவர் நிக்கோலா, பிரித்தானிய அரசு அளிக்கும் அதிகார பகிர்வு மசோதாவில் ஸ்கொட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முழு அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஸ்கொட்லாந்து நடத்தவிருந்த வாகெடுப்பிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் தனிநாடு கோரி SNP கட்சியின் முயற்சிகள் இரண்டாவது முறையாக தோல்வியை சந்தித்துள்ளது.
-http://world.lankasri.com