ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் முன்னேற்றம்: மேலும் ஒரு நகரத்தை கைப்பற்றினர்

ram_isis_001ஈராக்கில் உள்ள அன்பர் மாகாணத்தின் தலைநகரான ரமாடி நகரத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளை ஒன்றாக இணைத்து தனி நாடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக ஈராக்கில் கடும் தாக்குதல் நடத்திவருகின்றனர்.

ராணுவத்துக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவீச்சு தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய ராணுவத்தினர் ரமாடி நகரை விட்டு வெளியேறினர்.

இதனையடுத்து அந்நகரத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.

ஏற்கனவே மொசூல் நகரை கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தற்போது மிகப் பெரிய நகரான ரமாடியையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததால் அங்கு வசித்துவந்த பொதுமக்கள் ரமாடி நகரத்தை விட்டு அதிகளவில் வெளியேறி வருகின்றனர்.

-http://world.lankasri.com