கொடூரமாக தாக்கிய ஐ.எஸ்…..திணறிய ராணுவம்: இரண்டே நாட்களில் பலியான 500 பேர்

ramadi_attack_001ஈராக்கில் உள்ள அன்பர் மாகாணத்தின் தலைநகரான ரமாடி நகரத்தை கைப்பற்றுவதற்காக ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 500 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.எஸ் தீவிரவாதிகள் சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளை ஒன்றாக இணைத்து தனி நாடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே மொசூல் நகரை கைப்பற்றிய ஐ.எஸ் தீவிரவாதிகள் தற்போது மிகப்பெரிய நகரான ரமாடியையும் 17ம் திகதி அன்று தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.

இந்த நகரத்தை கைப்பற்றுவதற்காக, ராணுவத்துக்கு எதிராக ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவீச்சு தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முடியாமல், ராணுவத்தினர் ரமாடி நகரை விட்டு வெளியேறினர்.

கடந்த 2 நாட்களாக நடைபெற்ற இந்த தாக்குதலில், பொதுமக்கள், ராணுவவீரர்கள் என ஒட்டுமொத்தமாக 500 பேர் பலியாகியுள்ளதாக மாகாண கவர்னர் முகமது ஹைமூர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, கடந்த 2 நாட்களாக நடைபெற்ற தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை துல்லியமாக தெரியவில்லை, ஆனால் இதுவரை குறைந்தது 500 பேர் உயிரிழந்திருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

-http://world.lankasri.com