அரசியல்வாதிகளும் சமூக ஆர்வலர்களும் போலீஸ் விசாரணைக்காக தடுத்து வைக்கப்படும்போது தாமான் மேடான் தேவாலயத்தில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடம் அதேபோன்று நடந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என போலீஸ் நினைத்தது.
ஏனென்றால் போலீஸ் நிலையத்துக்கு அழைத்ததும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்தனர். முழுமையாக வாக்குமூலம் தந்தனர் என உள்துறை அமைச்சு கூறியது.
“அதனால் விசாரணைக்காக அவர்களைக் கைது செய்யவும் விலங்கிடவும் தடுத்து வைக்கவும் வேண்டிய அவசியமில்லாது போய்விட்டது”. அமைச்சு நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூரவமாக வழங்கிய பதிலில் இவ்வாறு கூறியது.
இதெல்லாம் எங்களுக்கும் தெரிந்த கதை தான்! புதுசா இருந்தா ஏதாவது சொல்லுங்கோ!
அண்ணன் வந்தாரு ,,,, கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொன்னாரு ,,, காக்க வைக்கவில்லை ,,,,,அம்பிகா அழைத்தபோது வரவில்லை ,,,,அதனால் 10 மணி நேரம் காக்க வைத்து பத்து கேள்விகள் கேட்டோம் ,,,;;அண்ணன் செய்தால் நியாயம் ,,,,அம்பிகா பேசினால் அநியாயம் ,,,,,அவன் சட்டை பைக்குள் சட்டம் ,,,,