நிழல் அமைச்சரவை: டிஏபி எதையும் அறிவிக்குமுன்னர் உள்ளுக்குள் கலந்து ஆலோசிக்க வேண்டும்

mafuzடிஏபி  தலைமைச்  செயலாளர்  நிழல்  அமைச்சரவை  பற்றிக்  கருத்துரைக்குமுன்னர்  அக்கட்சியின்  ஏற்பாட்டுக் குழுச்  செயலாளர்  அந்தோனி  லோக்கிடம் ஆலோசனை  கேட்க வேண்டும்  என்று  பாஸ்  தகவல்  தலைவர்  மாபூஸ் ஒமார்  கூறினார்.

பக்கத்தான்  ரக்யாட்  பரஸ்பர  மரியாதையின்  அடிப்படையில்  உருவானது  என்று  குறிப்பிட்ட  மாபூஸ்,  பக்கத்தானில்  நிழல்  அமைச்சரவை  அமைப்பதற்கு  பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி   ஆவாங் தடையாக  இருக்கிறார்  என்று  லிம்  கூறுவது  ஆதாரமற்றது  என்றார்.

“இன்று டிஏபி, பிகேஆர், பாஸ்  கொறாடாக்கள்  எதிரணித்  தலைவர்  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயிலைச்  சந்தித்தார்கள். அச்சந்திப்பின்போது  நாடாளுமன்றத்தைச்  சீரமைப்பதில்   நிழல்  அமைச்சரவை  முக்கிய  கூறல்ல  என்பது ஒப்புக்கொள்ளப்பட்டது.

“எனவே, பக்கத்தான்  பங்காளிக் கட்சி  ஒன்றைத்  தாக்கிப்  பேசுவதற்கு முன்னர்  லிம்,  நிழல்  அமைச்சரவை  பற்றி  லொக்கிடம்  விவரம்  கேட்டறிவது  விவேகமாகும்”, என அந்த  பொக்கோக் சேனா  எம்பி  கூறினார்.

நேற்று, லிம் நிழல்  அமைச்சரவை  அமைப்பதற்கு  ஹாடி  தடையாக  இருப்பதாகக்  கூறியிருந்தார்.