பதவி விலக விரும்பிய மக்களைவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா பதவியில் தொடர்ந்திருக்க முடிவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார்.
இன்று நாடாளுமன்றத்தில் 11வது மலேசியத் திட்டத்தைத் தாக்கல் செய்த உரையாற்றிய நஜிப், பண்டிகாரைக் குறிப்பிட்டும்போது “அவைத் தலைவர் அவர்களே” என்று சொல்லிச் சற்று யோசித்து “இன்னமும் அவைத்தலைவராக இரூப்பவரே” என்றும் சேர்த்துச்சொல்லிச் சிரித்தார்.
“மக்களவைத் தலைவர் இன்னமும் மக்களவைத் தலைவராகவே இருப்பதைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது”, என்றவர் சொன்னதும் அவையில் வெடிச்சிரிப்பு.
நம்ம நிலைமைதான் இப்போது சிரிப்பை சிரிக்கிறதே .
இன்னும் ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்து பணம் பண்ண கசக்குமா?
நாஜிப் தொடர்ந்தாள் நீ தொலைந்தாய்.
அந்த கக்கூஸ் பிரச்சனை ஓகே வா .
நீ அடிக்கும் இசைக்கு நடனமாடுபவன் இருப்பது மகிழ்ச்சிதானே …..