ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஒரு நாள் வருமானம் மட்டும் ரூ.6 கோடியே 37 லட்சம் என நியூயோர்க் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் அட்டூழியங்களை அரங்கேற்றி வரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இன்று உலகின் சக்திவாய்ந்த மற்றும் பணக்கார தீவிரவாத அமைப்பாக உள்ளது.
மேலும் இவர்கள் தங்கள் வசமுள்ள நகரங்களில் வசிக்கும் மக்களை மிரட்டி பணம் பறிப்பது, வரி விதிப்பதன் மூலம் மட்டும் அந்த அமைப்புக்கு நாள் ஒன்றுக்கு ரூ.6 கோடியே 37 லட்சம் வருமானம் கிடைக்கிறது.
நிலங்கள் கட்டிடங்களை அபகரிப்பது, ராணுவ உபகரணங்களை கொள்ளையடிப்பது, மேலும் குறைந்த அளவு ஊதியம் வழங்குவதன் மூலம் தங்கள் செலவை குறைத்துக்கொள்கிறார்கள்.
ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு மாதாமாதம் ஏற்படும் பெரிய செலவே உறுப்பினர்களுக்கு ஊதியம் அளிப்பது தான்.
ஊதியத்திற்கு மட்டும் மாதாமாதம் ரூ.19 கோடி முதல் ரூ. 63 கோடி செலவாகிறது.
மேலும் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறி வைத்து தாக்கி வருகின்றன.
இதனால் தீவிரவாதிகளுக்கு வருமானம் பாதித்தாலும் அவர்கள் எண்ணெய்யை மட்டும் நம்பி இல்லை.
ஏனெனில், அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் எண்ணெய்யை விற்பனை செய்வதை விட தங்கள் பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்கிறார்கள் என்று அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
-http://world.lankasri.com