வீணாகும் உணவு பொருட்கள்: அதிரடி நடவடிக்கையில் பிரான்ஸ்

waste_food_001பிரான்ஸ் நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை ஆகாத உணவு பொருட்களை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குவது தொடர்பாக பிரான்ஸ் அரசு வாக்கெடுப்பு நடத்தி வருகிறது.

நாடு முழுவதும் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை ஆகாத உணவு பொருட்கள் வீணாகி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, விற்பனை ஆகாத அதே சமயத்தில் கெட்டுப்போகாத உணவு பொருள்களை அங்குள்ள தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இது குறித்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினரான Guillaume Garot என்பவர், விற்பனை ஆகாத உணவு பொருட்கள் எந்த வித பயனும் இல்லாமல் குப்பை தொட்டிகளில் கொட்டப்பட்டு வருவது கவலை அளிக்கிறது என்றார்.

இந்த புதிய திட்டத்தை நடைமுறைபடுத்தியதற்கு பிறகு, சூப்பர் மார்க்கெட்டுகள் அப்பகுதியில் உள்ள தொண்டு நிறுவனங்களுடன் ஒரு உடன்படிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

பின்னர், கடைகளில் விற்பனை ஆகாத பொருட்களை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குவதின் மூலம் விலங்குகளுக்கு அல்லது விவசாய உரங்கள் தயாரிக்க அவற்றை பயன்படுத்தலாம்.

ஆனால், அரசு நடைமுறைப்படுத்தவுள்ள இந்த திட்டத்திற்கு சில எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்துள்ளது.

அரசின் இந்த திட்டத்தை தவறாக புரிந்துகொண்டு ‘காலாவதியான உணவு பொருட்களையும் தங்களிடம் கொடுக்க வாய்ப்புள்ளதால், இதனை தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சில தொண்டு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

சூப்பர் மார்க்கெட்டுகள் மட்டுமின்றி, ஒவ்வொரு வீடுகளிலும் வீணாகும் உணவு பொருட்களை மாற்று வழிகளில் பயன்படுத்த அரசு முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

பிரான்ஸ் நாட்டில் மட்டும் ஆண்டுதோறும் ஒவ்வொரு நபரும் சுமார் 20 பில்லியன் யூரோ மதிப்புள்ள 20 முதல் 30 கிலோ எடையுள்ள உணவு பொருட்களை வீணாக குப்பை தொட்டிகளில் கொட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com