43 பேரை கொன்று குவித்த பொலிசார்: மெக்சிகோவில் பயங்கர சம்பவம்

mexico_attck_001மெக்சிக்கோ நாட்டில் போதை மருந்து கடத்தல் கும்பலுக்கும், பொலிசாருக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 43 பேர் கொல்லப்பட்டுள்ளதால் அந்நாட்டில் பதற்றம் நீடித்து வருகிறது.

Michoacan மாகாணத்தில் Jalisco New Generation என்ற பெயருடைய பயங்கரமான போதை மருந்து கடத்தல் கும்பலை ஒடுக்க பொலிசார் பல வருடங்களாக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் Tanhuato என்ற நகரில் அந்த போதை மருந்து கும்பல் கூடுவதாக நேற்று பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலை தொடர்ந்து அதிரடியாக களத்தில் இறங்கிய பொலிசார், ரகசிய இடத்தில் கூடிய கடத்தல் கும்பலை சுற்றி வளைத்தது.

அப்போது ஆயுதம் ஏந்திய கடத்தல்காரர்கள் பொலிசாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர்.

கடத்தல்காரர்களுக்கு பதிலடி கொடுத்த பொலிசார் வியூகமாக படைகளை அமைத்து கடத்தல்காரர்களை நோக்கி அதிரடியாக தாக்க தொடங்கினர்.

சுமார் 3 மணி நேரங்கள் நீடித்த இந்த மோதலில், 42 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஒரு பொலிசாரும் உயிரிழந்தார்.

இந்த தாக்குதல் குறித்து பேசிய பொலிஸ் அதிகாரி Monte Alejandro Rubido, பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 42 பேர் இறந்துள்ளதாகவும், இவர்கள் அனைவரும் போதை மருந்து கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்தில் பதற்றம் நீடித்து வருவதால், கூடுதலாக சிறப்பு பொலிசார் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக Michoacan மாகாணத்தில் கடத்தல்காரர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. இந்த கடத்தல் கும்பலுக்கும், பொலிசாருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் மார்ச் மாதத்திலிருந்து 20 பொலிசார் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com