21 பேர் பலி….இருண்ட நாட்களை சந்திக்கப்போகும் சவுதி: எச்சரிக்கும் ஐ.எஸ்

saudi_attack_002சவுதி அரேபியாவில் மசூதி ஒன்றில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சவுதியின் உத்யோகப்பூர்வ செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

சவுதி அரேபியாவின் al-Qadeeh என்ற நகரத்தில் உள்ள இமாம் அலி என்ற மசூதியில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகை நடைப்பெற்றுக்கொண்டிருந்தது.

அப்போது அங்கே புகுந்த தற்கொலை படை தீவிரவாதி அபு அமீர் அல்-நஜ்தி என்பவர், உடலில் கட்டி வந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார்.

இந்த குண்டுவெடிப்பால் அந்தப் பகுதியே போர்க்களமாக மாறியது. இதில் 21 பேர் உடல் சிதறி உயிரிழந்ததுடன், 81 பேர் காயமடைந்துள்ளதாக சவுதியின் உத்யோகப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐ.எஸ் அமைப்பு பொறுப்பு

தாக்குதலுக்கு ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. அரேபிய தீபகற்பத்தில் இருந்து ஷியா பிரிவு முஸ்லிம்களை முற்றிலும் ஒழிக்கும் வரையில் இது போன்ற தாக்குதல் தொடரும் என தெரிவித்துள்ளது.

மேலும், சவுதி அரேபியாவுக்கு இனி வரும் நாட்கள் இருண்ட நாட்களாகத்தான் இருக்கும் என எச்சரித்துள்ளது.

-http://world.lankasri.com