ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான போரில் தோல்வியடையவில்லை: ஒபாமா

obamaஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிரான எங்கள் போர் தோல்வியடையவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறியுள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் ஐஎஸ் தீவிரவாதிகள் சமீபத்தில் ஈராக்கின் ரமடி மற்றும் பல்மைரா ஆகிய நகரங்களை கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து ‘தி அட்லான் டிக்’ இதழுக்கு ஒபாமா அளித்துள்ள பேட்டியில், ரமடியை ஐ.எஸ் அமைப்பினர் கைப்பற்றியுள்ளனர். இது எங்களுக்கு பின்னடைவுதான்.

ஈராக் ராணுவத்தினருக்கு முறையான பயிற்சி இல்லாததுதான் இதற்குக் காரணம். மேலும் ஐ.எஸ் அமைப்பை எதிர்த்துப் போரிடுவதில் அந்நாட்டில் உள்ள சன்னி பிரிவு மக்கள் அதிகளவில் ஈடுபாடு காட்டுவதில்லை, எனவே எங்களின் பின்னடைவுகளுக்கு இதுவும் ஒரு காரணம்.

ராணுவத்தினருக்குப் பயிற்சி அளிப்பதோடு, சன்னி பிரிவு மக்களையும் ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான போரில் அதிகளவு ஈடுபடுத்த உள்ளோம்.

எனவே, எங்களின் போராட்டம் தோல்வியடையவில்லை என்று கூறியுள்ளார்.

-http://world.lankasri.com