யுஎஸ்ஜே 11-இல் “ராட்சத எலி” பிடிபட்டதாகக் கூறும் செய்திகளும் படங்களும் இணையத்தளத்தில் உலா வந்தாலும் அவற்றில் உண்மை இல்லை என்கிறார் சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் ஹன்னா இயோ.
எலி படம்பிடிக்கப்பட்ட கோணம் அதன் தோற்றத்தைப் பெரிதுபடுத்திக் காட்டுவதாக சிலாங்கூர் சட்டமன்றத் தலைவருமான அவர் தெரிவித்தார்.
இன்னொரு கோணத்தில் பிடிக்கப்பட்ட படமும் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய ஹன்னா அதுவே எலியின் உண்மையான தோற்றத்துக்குச் சான்று என்றார்.
“அதனால், பாரிசான் நேசனல் இணையத்தில் கதை கட்டி விடுவதை நிறுத்திக் கொள்ளலாம்”, என்றவர் தம் முகநூல் பக்கத்தில் கூறினார்.
பாரிசான் நேசனிலுள்ள ” பெருஷாலிகளை” முதலில் களை எடுங்கப்பா.அங்குள்ள பெருஷாளிகள் இதைவிட பெரியது.பண மூட்டைகளை ஓட்டைப்போடுவதில் அவைகளுக்கு சலத்தவைகள் எதுவும் இல்லை.
கரிகாலரே, பாரிசான் நேக்ஷனல் பெரிச்சாளிகளிலே முதல் இடம் ம.இ.கா பெருச்சாளிகளுக்குத்தான் ! நொந்து நைந்துபோன இந்தியர்களுக்கு என கொஞ்சம் நஞ்சம் ஒதுக்கப்பட்டதையும் ஆட்டையைப்போட்டு ஓ சாரி ஓட்டையைப்போட்ட ஈவிரக்கமற்ற ஈனப் பெருச்சாளிகள் !அதிலும் அந்த மொட்டை கிழட்டுப் பெருச்சாளியை யாராவது மறக்க முடியுமா ?