பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலை ஆதரிக்க மறுப்பது அவர் அம்னோவுடன் இருப்பதையே விரும்புகிறார் என்பதைக் காண்பிக்கிறது.
இதைத் தெரிவித்த டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், “ஹாடி பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தல் பரப்புரைக்குச் செல்லவில்லை என்பதுடன் வான் அசிசாவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவுமில்லை”, என்றார்.
“இது அவரின் உடல் பக்கத்தான் ரக்யாட்டில் இருந்தாலும் உள்ளம் அம்னோவிடம்தான் என்பதைக் காண்பிக்கிறது”.
எதிரணிக் கூட்டணி இரண்டு வாரங்களில் இல்லாமல் போகலாம் என்று லிம் கிட் சியாங் நேற்று எச்சரித்திருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது குவான் எங் இவ்வாறு கூறினார்.
உடல் பகாத்தானுக்கு உயிர் அம்னோவுக்கு ? dap யும் pas சும் கொள்கையில் ஒரே நிலைப்பாடு ! காலம் காலமாக எதிர் கட்சியாகவே இருக்க ஆசை ! இப்பொழுது kedilan அந்த நிலைப்பாடு இல்லை !