அதிகாரிகளை ஜெயிலுக்கு சுற்றுலா அழைத்து சென்ற சீனா

prisionet_tour_001சீனாவில் நிலவி வரும் ஊழலை தடுப்பதற்காக அதிகாரிகளுக்கு “சிறைச்சுற்றுலா” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமீப காலமாக சீனாவில் அரசு அதிகாரிகள் பலர் ஊழல் குற்றத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.

எனவே ஊழல் நடவடிக்கைகளைத் தடுக்கும் விதமாக அரசு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன்படி, சீனாவின் ஹூபி மாகாணத்தில் உள்ள சிறைக்கு சுமார் 70க்கும் அதிகமான அதிகாரிகள் சமீபத்தில் `சிறைச் சுற்றுலா’வுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அந்தச் சிறையில் ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு தற்போது தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் முன்னாள் அரசு அதிகாரிகள் 15 பேரை சுற்றுலா குழுவினர் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதன் மூலம் தற்போது பணியில் உள்ள அதிகாரிகளுக்கு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

-http://world.lankasri.com