கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 1200 பேர் அகதிகளாக கிரீஸ் நாட்டின் தீவுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு ஆசிய நாடுகளில் தீவிரவாதிகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் ஏராளமான ஆண்களும் பெண்களும் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். இத்தாலிக்கு அடுத்து பொருளாதார ரீதியாக ஐரோப்பிய ஒன்றியத்தில் கிரீஸ் நாடு அகதிகளுக்கு ஏற்ற நாடாக உள்ளது.
எனவே துருக்கி நாட்டின் கொஸ்(Kos), லெஸ்வொஸ்(Lesvos), சியோஸ்(Chios) போன்ற தீவுகளின் வழியாக கிரீஸ் நாட்டிக்கு வருகின்றனர்.
சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து கொஸ் தீவுக்கு வந்தவர்கள் ஹொட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்கள் தங்குவதற்கு அதிக உதவி செய்யும்படி ஐரோப்பிய ஒன்றியத்திடம் கிரீஸ் கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக கிரீஸ் நாட்டை சேர்ந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்ற ஆணையாளர் டிமித்ரி அவ்ரமொபவுலோஸ்(Dimitris Avramopoulos) ஏத்தன்ஸ் நகரத்தில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் இவ்வாறு மக்கள் அதிகளவில் இடம்பெயர்வதை தடுக்க ஒரு பொதுவான எல்லையை அமைப்பதற்கு பல்கெரியா, துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. இந்த எல்லை பல்கேரியா மற்றும் துருக்கிக்கு இடையிலுள்ள காபிட்டன் அன்ட்ரீவொ(Kapitan Andreevo) சோதனை சாவடி அருகில் இந்த எல்லை அமையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த வருடத்தில் மத்தியதரைகடல் வழியாக ஐரோப்பியாவுக்கு வர முயன்று இதுவரை 1, 770 அகதிகள் பலியாகியுள்ளனர் என்று சர்வதேச குடிஏற்றத்துக்கான ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புலம் பெயர்ந்தோர்களுக்கு ஐரோப்பா மேலும் பல உதவிகள் செய்ய வேண்டும் என்று ஐக்கிய சபையின் தலைவர் பான் கீ மூன் வேண்டுகொள் விடுத்துள்ளார்.
-http://world.lankasri.com