1மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய நிதிச் செயல்பாடுகள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் இணக்கத்தின்பேரில்தான் நடந்துள்ளன என்பதால் பொது விசாரணைக் குழு பிரதமரை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்கிறார் பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரம்லி.
1எம்டிபி நிறுவனத்துக்கு முன்பிருந்த திரெங்கானு முதலீட்டு நிறுவன (டிஐஏ)த்தின் அமைப்பு விதிக் குறிப்புகள் எல்லாச் செயல்பாடுகளும் பிரதமரின் சம்மதத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்று கூறுவதை மலேசியாகினி நேற்று வெளிப்படுத்தியிருந்ததை அடுத்து ரபிஸி இவ்வாறு கூறினார்.
“எல்லாம் அவருக்குத் தெரிந்தே இருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. அது( நஜிப்பின் சாட்சியம்) 1எம்டிபி தவறாக வழிநடத்தப்பட்டது அவருக்குத் தெரியுமா இல்லையா என்பதைத் தெளிவுபடுத்திவிடும்.
“நஜிப் ஒன்றிரண்டு நாள்களை ஒதுக்கிக்கொண்டு நாடாளுமன்றத்துக்கு வந்து விளக்கமளிப்பது நல்லது”, என்றாரவர்.