பௌத்த இனவாத குழுக்களுக்கு பயந்து மியான்மரிலிருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் கடல் வழியாக படகுகளில் வெளியேறி வருகின்றனர்.
இவ்வாறு படகுகளில் செல்லும் மக்களுக்கு அண்டை நாடுகள் அடைக்கலம் கொடுக்க மறுப்பதால், பலர் உண்ண உணவின்றி நடுக்கடலில் படகிலேயே உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மியன்மாரில் 5 மில்லியன் முஸ்லிம்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறன.
பான்தாய்கள் – பர்மிய பூர்வீகக் குடிகள்,
பஷுஷ் – சீனா, தாய்லாந்து பூர்வீகத்தினர்,
ரோஹிங்கியா – இந்தியா,பங்களாதேஷ் பூர்வீகத்தினர் என பிரதானமாக மூன்று வகையாக முஸ்லிம்கள் அங்கு வாழ்வதாக அறியப்படுகிறது.
இதில் ரோஹிங்கியா முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்கள் பங்காளி இனத்தவர்கள் எனவும் அவர்கள் மியன்மார் இனத்தவர்கள் அல்ல என்ற கருத்து மியான்மரில் 1956 இல் பரவ ஆரம்பித்து இதன் விளைவாக நாடு முழுவதும் முஸ்லீம்களுக்கெதிரான இனவாதச் செயல்கள் ஆரம்பித்தது.
இந்த நிலையில், 1990 களில் முஸ்லிம் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்தது. இதனால் 268.000 பேர் பங்களாதேஷுக்கு இடம்பெயர்ந்தனர். அதேபோல் 1996 இல் ஏராளமான பள்ளிவாசல்கள் இடித்துத் தரைமட்டமாகக்கப்பட்டது.
அங்கு வாழ்ந்துவந்த ரோஹிங்கியா முஸ்லிம் சிறுபான்மையினர் இந்த வன்முறைகளில் பெரும்பான்மையாகப் பாதிக்கப்பட்டார்கள்.
280 பேருக்குமேல் வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து 1,40,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் இடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.
இனவாத புத்த பிக்குகள் தலைமையில் இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அன்றிலிருந்து இன்று வரை ரோஹிங்கியா மக்களின் நிலை அங்கு படுமோசமாக உள்ளது.
இன்று ரோஹிங்கியா முஸ்லிம்கள் பலவந்தமாக நாட்டைவிட்டு வெளியேற்றும் சூழ்நிலை உள்ளதால் சிறு படகுகளில் மூட்டை போன்று அடைக்கப்பட்டு அங்கிருந்து புறப்பட்டு வருகின்றனர்.
அண்டை நாடுகள் அடைக்கலம் தர மறுப்பதால் சிறு பிள்ளைகள், கர்ப்பிணி பெண்கள் வயோதிகர்கள், கடலில் தத்தளித்துக் கொண்டு உயிழக்கும் நிலையும் ஏற்படுகிறது.
சமீபத்தில் படகுகளில் நாட்டை விட்டு தப்பி வந்த நூற்றுக்கணக்கானோரை அண்டை நாடுகள் தங்களின் நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்ததால் நடுகடலில் தத்தளித்தனர்.
பின்னர் மலேசியாவும், இந்தோனேசியாவும் அடைக்கலம் கொடுக்க முன் வந்தது குறிப்பிடத்தக்கது. ரோஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு நடக்கும் கொடுமைகளை கண்டித்து சர்வதேச அளவில் கடும் கண்டன குரல் எழும்பி வருகின்றன.
ஈழத்தமிழரின் சாயலுடன் இன்னொரு அகதிக்கூட்டம் – ரொகிங்கியா உண்மை நிலை என்ன?
-http://www.tamilwin.com
மற்ற முஸ்லிம் நாடுகளில் உள்ள சிறுபான்மை மதத்தினரை முஸ்லிம்கள் எப்படி நடத்துகிறார்கள் என்று முதலில் தெரிவித்துவிட்டு பிறகு மியான்மாரை பற்றி எழுதவும்! குறிப்பாக பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், காஷ்மீர், ஈராக், சிரியா, லெபனான்…….. மேலும் 57 முஸ்லிம் நாடுகளில் உள்ள சிறுபான்மை மதத்தினரின் நிலை எப்படி உள்ளது என்று தெரிந்துகொண்டு இக்கட்டுரையை பதிப்பித்திர்க்க வேண்டும்!!!!
நானும் உங்களை ஆமோதிக்கிறேன் திரு. மயிரை மீன் அவர்களே. மியன்மாரில் பொய் கேட்டால் உண்மை நிலவரம் தெரிய வரும். ஒண்ட வந்த பிடரி ஊர் பிடாரியை விரடியது போல உள்நாட்டு மக்களுக்கு கெடுதல் நினைத்தால் தூக்கி வைத்து கொஞ்சுவார்களா என்ன? அரபு நாடுகள் இவர்களுக்கு வாழ்வு கொடுக்கலாமே….. ??? அங்கு அவர்களுக்கு வீளை கொடுத்த மாதிரி இருக்கும். குடிவைத்த மாதிரியும் இருக்கும்…. செய்வார்களா?
சைவர்கள் வந்தாரை வாழ வைப்பவர்கள். இதுதான் தமிழரின் இளகிய அன்பு மனத்திற்கு அடையாளம். இறை நெறி அற்ற பௌத்தர்களிடம் இத்தகைய மனிதாபிமானத்தை எதிர்பார்ப்பது வீண் செயலே. 2-ம் உலக போருக்குப் பின்னர் மலைநாட்டு செட்டிகள் மீண்டும் பர்மாவுக்குச் சென்று அவர்தம் நிலங்களை பெற வேண்டி செய்த முயற்சிகள் வெற்றி அளிக்கவில்லை. தமிழர்களின் பல்லாயிர ஏக்கர் விளை நிலங்களை பர்மிய மக்கள் கை பற்றிக் கொண்டனர். பர்மிய அரசாங்கமும் தமிழர்களுக்கு அந்நிலங்களை மீட்டுத் தர மறுத்து விட்டது. இந்நிலையில் அங்கு வாழ்ந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்களும் நடைபாதை வழியாகவே கிழக்குப் பாக்கிஸ்தான் (பங்களாதேஷ்) வழி கல்கத்தா வரைக்கும் வந்து பின்னர் இரயிலில் தமிழ் நாடு வந்து சேர்ந்த பர்மிய தமிழரின் சோகக் கதைகள் ஏராளம். அன்று தமிழர்களுக்கு என்ன நடந்ததோ அதேபோல் ரோஹிங்கியா மக்களுக்கும் இன்று நடக்கின்றது.பல மதங்களை கொண்ட உலக மக்களில் மனித நேயத்துடன் இருக்கும் ஒரே சமயம் சைவம். அதனால்தான் சைவத்திற்கு அன்பே சிவம் என்ற பெயர் விளங்கலாயிற்று. தமிழர் தலை நிமிர்ந்து நடக்க சைவம் காட்டும் அன்பு வழியிலும் குறள் காட்டும் அற நெறியிலும் தொடர்ந்து நடப்போம். உண்மை நெறி என்றென்றும் இப்பூவுலகில் நீடித்து நிற்கும். பொய்யானவை கால போக்கில் நிலைபெறாமல் போகும். இதைத்தான் இன்று நாம் மேலை நாடுகளிலும், மத்திய ஆசியா, வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் கண் கூடாக பார்ப்பது.
புத்தம் சரணம் கச்சாமி ! இலங்கையில் ரத்தம் சரணம் கச்சாமி !! மியென்மாரில் மரணம் சரணம் கச்சாமி !!!
மீன் கூற்று சரியே! சீனியர் ரசாக் 10 லட்சம் இந்தியர்களை அகதிகளாக திரும்ப இந்தியவிற்கே அனுப்பியது மறந்து போச்சா? காட்டை நாடாக மாற்றிய குற்றத்திற்காக நம்மவர்களுக்கு பெரும்பான்மை மலாய்க்கார அரசாங்கம் செய்த கொடுமையை மறக்கலாகாது..பிரிட்டிஷ் அரசாங்கம் இந்நாட்டிற்கு சுதந்திரம் மூன்று இனத்திற்கும் சமமாக பகிர்ந்து கொடுத்ததை ஒரே இனம் ஏப்பம் விட்டதையும் மறக்கலாகாது..50 களிலிருந்து 70 வதுவரை இந்நாட்டின் வருமானத்தில் 70% தோட்டப்புற பாட்டாளி மக்களின் உழைப்பு சோம்பேறி மலாயக்காரகளுக்கு சோறு போட்டதையும் மறக்கலாகாது..காக்க கை வசம் நிறைய தில்லு முல்லு வச்சிருக்கான்! அடிக்கடி இந்த மாதிரி முஸ்லிம் ஜன தொகையை நிரப்பி அடுத்து அடுத்து வரும் தேர்தல்களை சமாளித்து அம்னோவை ஆட்சியில் வைத்திருந்தால் மட்டுமே அவன் சொட்டை மகன் நாட்டை மொட்டை அடிக்க வகை செய்யும்! விரைவில் இவர்கள் ஆட்டம் சம்போ சிவா சம்போ!
கண்ணதாசன் வரிகள்தான் ஞாபகதிர்க்கு வருகிறது ‘இங்கே இருப்பது சில காலம் அதற்குள் ஏனோ அகம்பாவம் ‘கண்ணாடி வீட்டீந்து கொண்டுக கல் எரிந்த கதைதான் !