ஈரானுக்கு வான்வழித் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் எஸ்-300 ரக ஏவுகணைகள் விற்பனை செய்யப்படுவதை ரஷியா செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
எனினும், அந்த ஏவுகணைகளும், அதனை இயக்குவதற்கான தொழில்நுட்பக் கருவிகளும் ஈரானுக்கு அனுப்பப்படுவதற்கான தேதியை ரஷியா அறிவிக்கவில்லை. இதுகுறித்து
ரஷிய பாதுகாப்புக் கவுன்சில் துணைத் தலைவர் யெவ்கெனி லக்யானோவ் கூறியதாவது:
ஈரானுக்கு எஸ்-300 ஏவுகணைகளை விற்கும் முடிவு உறுதி செய்யப்பட்டுவிட்டது.
எனினும், இந்த விற்பனையின் அனைத்து செயல்முறைகளையும் நிறைவு செய்து, ஏவுகணகளை ஈரானுக்கு அனுப்புவதற்கு இன்னும் சிறிது காலம் பிடிக்கும்.
அதற்கான தேதியை இப்போது உறுதியாகச் சொல்ல முடியாது என்றார் அவர். அமெரிக்கா, இஸ்ரேல், பிற ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ஈரானுக்கு வான்பாதுகாப்பு ஏவுகணைகளை வழங்க ரஷியா முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-http://www.dinamani.com