முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், முன்பு தாம் மருத்துவராக தொழில் புரிந்தபோது உள்நாட்டு வருமான வரி வாரியத்தின் அதிரடிச் சோதனைகளுக்கு அடிக்கடி ஆளானதாகவும் இன்றோ பெரும் பணக்காரர்களாக திகழும் அமைச்சர்களோ சுதந்திரமாக திரிகிறார்கள் என்றும் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்.
“அரசாங்க அதிகாரிகள் வருமானத்தைமீறிய வாழ்க்கை வாழ்ந்தால் வருமான வரி வாரியத்தின் விசாரணைக்கு ஆளாவர்கள்.
“ஆனால், அமைச்சர்கள் அல்லது தனிப்பட்ட மக்கள் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தால் எந்த விசாரணையும் நடப்பதில்லை”, என்று மகாதிர் தம் வலைப்பதிவில் பதிவிட்டிருக்கிறார்.
இது என்ன புதிதா??? உங்கள் ஆட்சியிலிருந்து இந்நாள்வரை பாரிசான் ஆட்சியில் இது ஓர் தொடர்கதைதானே!!!!
மகாதிருக்கு நான் முழு ஆதரவு தருகிறேன் ,அப்பத்தான் நஜிப்பை கழ்ற முடியும்
இவர்ற்றுக்குகெல்லாம் முன்னோடி நீங்கள்தான் இபொழுது ஏன் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்கிறீர்கள் ?
வலிக்குதா தாத்தா. நீ ஆரம்பிச்ச இன பாகுபாடான மறைமுகமான வருமான வரி நடவடிகக்யினால் எத்தனை மலாய்காரர் அல்லாதவர்கள் பாதிக்கப் பட்டனர்? உமக்கு வலி வந்தாதான் தெரியுது டாக்டர்?
இவனுக்கு எதுவும் வலிக்காது- அவ்வளவு பணம் கொட்டிகிடக்குது இவனிடம்/
இவன் விதைத்த விதை …. அறுவடைக்கு தயாராகிவிட்டது …..
இப்போத்தான் இவர் தூக்கத்திலிருந்து விழித்தாரா? இதெல்லாம் ரொம்ப நாளா நாட்டில் நடப்பது இவருக்கு தெரியவே தெரியாதா ?
எல்லாம் நாடகம், இப்போது ஆள்பவனை விரட்டிவிட்டு, தனது மொட்டை மகனை பதவியில் அமர்த்த செய்யும் குள்ள நரித்தனம்.
இவர் மகன் இவரையும் பிரித்தாளுவதில் பிரிட்டிக்ஷ்காரனையும் மிஞ்சிவிடுவான் போல, அண்மையில் கூலிமில் சித்திரைப் புத்தாண்டுக்கு பேணர் வைத்திருந்தது இந்தக் குட்டி குள்ளநரி.
விக்ஷேசம் என்னவென்றால் மலாய், தமிழோடு, தெலுங்கு, மலையாளம் என இந்தியர்களை மூன்றாய்ப் பிரித்து புத்தாண்டு வாழ்த்து சொல்கிறான். ஒற்றுமையாய் இந்தியர்கள் எதுவும் கேட்டால் வலிமை சற்று அதிகம், இப்படிப் பிரித்துவிட்டால் அவரவர் சங்கத்திற்கு கொஞ்சம் தந்தால் போதும், எப்படிப்பட்ட தந்திரம் ? இந்தியர்களே விழித்துக் கொள்ளுங்கள், ஒற்றுமையே பலம். சிதறினால் சிதைத்துவிடுவார்கள்.