ஹுடுட் சட்டம் அரசமைப்புடன் ஒத்துப்போக வேண்டும் என்ற கூட்டரசு அரசாங்கத்தின் நிலைப்பாடு, அது அந்த இஸ்லாமிய சட்டத்தை ஆதரிக்கவில்லை எனப் பொருள்படாது.
“ஏனென்றால் ஹுடுட் அரசமைப்புக்கு ஏற்புடையதே”, என்கிறார் தகியுடின் ஹசான்(பாஸ்- கோத்தா பாரு).
கிளந்தான் அரசு, மாநிலச் சட்டங்கள் எல்லாமே, 22 ஆண்டுகளுக்குமுன் கொண்டுவரப்பட்ட கிளந்தான் ஷியாரியா குற்றவியல் சட்டம் உள்பட, அரசமைப்புக்கு இசைவாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது என்றார்.
“ஹுடுட் அரசமைப்புக்கு எதிரானது என்று நீதிமன்றம் இதுவரை தீர்ப்பளித்ததில்லை”, என நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தபோது அவர் சொன்னார்.
ஹுடுட்மீது தனி உறுப்பினர் சட்டவரைவு தாக்கல் செய்யப்படும்போது அம்னோ என்ன செய்யும் என்று ஏதாவது அறிகுறி தெரிகிறதா என்று வினவியதற்கு, “அவர்கள் ஆதரிப்பார்கள்போலத் தெரிகிறது”, என தகியுடின் கூறினார்.
அப்துல் ஹாடி ஆவாங்(பாஸ்- மாராங்) அதைக் கொண்டு வரும்போது அதைப் பரிசீலிப்பதாக மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியாவும் வாக்குறுதி அளித்திருக்கிறாராம்.
மத்திய அரசலமைப்பு அந்த ஹுடுத் சட்டத்தை ஏற்க்க வில்லை என்பதால்தான் கிளந்தானில் ஹுடுத் சட்டத்தை அமுலுக்கு கொண்டு வரமுடியவில்லை என்று சா ஆலாம் எம்பி காலிட் சாமாத் அவர்களை சந்தித்து உரையாடிய போது குறிப்பட்டார். ஆனால் அம்னோவில் உள்ள தீவிர வாதிகள் சிலர் இதை ஆதரிக்கலாம்…?
“மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியாவும் வாக்குறுதி அளித்திருக்கிறாராம்”.
மூளிகளுக்கெல்லாம் அறிவு முட்டியில்தான் உள்ளது. 1MDB திருடர்களைப் பற்றி விவாதிக்க நாடாளுமன்றத்திற்கு அவசரம் ஏதும் இல்லையாம். இப்ப ஹுடுடுக்குதான் அவசரமாம். இந்நாட்டின் எதிர்காலத்தின் மீது இருக்கும் நம்பிக்கை வெகு வேகமாக குறைந்து வருகின்றது என்பதை அமீனோ திருடர்களும், நிலா கட்சி மூடர்களும் அறியவில்லை போலும்.