சிறையில் உள்ள அன்வார் இப்ராகிமுக்கு முறையான மருத்துவ சிகிச்சை தேவை என்ற அவரின் குடும்பத்தாரின் கோரிக்கைகளைக் கவனிக்காமல் தாமதப்படுத்தி வந்த சிறைத்துறை முடிவில் அவரை மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது.
“அவர் பரிசோதனைக்காகவும் கவனிக்கப்படுவதற்காகவும் சிகிச்சைக்காகவும் ஜூன் 2 செவ்வாய்க்கிழமை கோலாலும்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்படுவார் என இரண்டு நாள்களுக்குமுன் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது”, என பிகேஆர் மத்திய செயல்குழு உறுப்பினர் ஜோஹாரி அப்துலும் அன்வாரின் மகள் நூருல் நுஹாவும் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினர்.
சிறையில் உள்ள அன்வாரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாக அவரின் குடும்பத்தார் ஏற்கனவே கூறி வந்தனர்.