இறந்த பின்னும் வாழும் அண்ணனின் முகம்: தொட்டுப்பார்த்து பரவசமடைந்த தங்கை (வீடியோ இணைப்பு)

facechnage_opration_001அமெரிக்காவில் இறந்தவரின் முகத்தை வேறு ஒரு நபருக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்காவின் விர்ஜீனியாவை சேர்ந்த ரிச்சர்டு நோரிஸ் என்பவர் கடந்த 1997ம் ஆண்டு தனது தலையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்த சம்பவத்தால், அவரது முகம் சிதைந்துபோனது, இதனைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு அறுவைசிகிச்சைகள் செய்தும் அவரது முகத்தை சரிசெய்ய இயலவில்லை.

இந்நிலையில் விர்ஜீனியாவை சேர்ந்த ஜோஸ்வா(21) என்ற வாலிபர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

இவரது முகத்தை தானமாக பெற்று, நோரிஸ்க்கு பொருத்த மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையில், அவரது பல், தாடை, நாக்கு மற்றும் நரம்புகள் மாற்றப்பட்டன.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் ரிச்சர்டு நோரிஸின் முகம் இறந்த ஜோஸ்வாவின் முகத்தோற்றமாக மாறியது.

சமீபத்தில் விர்ஜினியா வந்த ஜோஸ்வாவின் சகோதரி ரேபேகா அவெர்சனோ முகம் மாற்று அறுவைசிகிச்சை செய்து கொண்ட ரிச்சர்டு நோரிஸை நேரில் சந்தித்துள்ளார்.

அப்போது, அவரது முகம், அச்சு அசல் இறந்த தனது சகோதரன் ஜோஸ்வா போன்று இருந்ததை பார்த்து ஆனந்தம் அடைந்தார்.

மிகவும் உணர்ச்சி வசப்பட்ட அவர், நோரிஸிடம், உங்களின் முகத்தை ஒரு தடவை தொட்டு பார்க்கலாமா என கேட்டுள்ளார்.

அதற்கு அவர் சம்மதிக்கவே அவரது முகத்தை தொட்டு பார்த்து மகிழ்ந்த அவர், தனது சகோதரனை நேரில் பார்ப்பது போன்று இருப்பதாக பரவசம் அடைந்தார்.

மேலும் ஜோஸ்வாவின் தாயார் ஜிவெனும், நோரிஸை நேரில் சந்தித்து ஆனந்த கண்ணீர் விட்டார்.

இது குறித்து ஜிவென் கூறியதாவது, எனது மகனின் முகத்தை தானமாக வழங்கியது நாங்கள் எடுத்த நல்ல முடிவு, தற்போது எனது மகனின் முகத்தை வேறு ஒரு நபரில் உடலில் பார்ப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.

-http://world.lankasri.com