ரஷ்யாவில் அடையாளம் தெரியாத பயங்கர வெளிச்சத்துடன் பறக்கும் பொருள் ஒன்று படம் பிடித்து யூடியூபில் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த வீடியோவில், பூமியில் இருந்து வானத்தை நோக்கி ஒரு ஒளி வெள்ளம் செல்கிறது.
அது மஞ்சள் வடிவ நீராவி பாதையை காட்டுகிறது, பின்னர் அது ஒரு பிரகாசமான பொருளாக மாறுகிறது.
கடந்த மார்ச் மாதம் ரஷ்யாவின் பேர்ம் பகுதியில் கிஷல் அருகே இது படம் பிடிக்கப்பட்டு உள்ளது.
இந்த பொருள் மேலும் மேலும் உயர்ந்து செல்கிறது. பின்னர் அது மூன்றுக்கும் மேற்பட்ட பொருளாக பிரிந்து இருண்ட வானத்தில் உலா வருகிறது.
இது குறித்து இங்கிலாந்து பத்திரிகை ஒன்று வெளியுட்டுள்ள செய்தியில் ரஷ்யா அதிபர் விளாடிமர் புடின் ரகசியமாக நீண்டதூரம் சென்று தாக்ககூடிய ஏவுகணை சோதனையை நடத்தினாரா என சந்தேகம் எற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஒருவேளை இது வேற்றுகிரகவாசிகளின் வாகனமாக இருக்கலாம் எனவும் கருத்து நிலவுகிறது.
-http://world.lankasri.com





























