உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிராக போராட ஹாலிவுட் நடிகர் ஒருவர் முடிவு செய்துள்ளார்.
ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் கொண்டுள்ள ஐ.எஸ் அமைப்பு தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கும் நோக்கில் பல்வேறு அட்டூழியங்களை நிகழ்த்தி வருகின்றன.
இந்த ஐ.எஸ் அமைப்பை எதிர்த்து குர்திஷ் அரசு படையினர் அமெரிக்க உதவியுடன் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த குர்திஷ் அமைப்பில் இங்கிலாந்து நடிகர் மைக்கேல் என்ரைட்(51) என்பவரும் இணைந்துள்ளார்.
சிரியாவில் உள்ள வளைகுடா நாடுகளில் இருந்து ஒளிபரப்பப்படும் அல்–ஆன் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், மனிதாபிமானத்துக்கு எதிராக ஐ.எஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது, எனவே மனிதாபிமானம் விடுத்த அழைப்பின் பேரில் ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக போரிட குர்திஷ் அமைப்பில் இணைந்துள்ளேன்.
சிரியா வந்துள்ள நான், இங்கிருந்து புறப்படமாட்டேன், ஒருவேளை நான் போரில் இறக்கநேரிடலாம் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து மைக்கேல் தனது குடும்பத்தினருக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
-http://world.lankasri.com
நமது தமிழ் திரைப்பட நடிகர் கேப்டன் விஜயகாந்த் ( abang mata merah ) இப்படி முடிவு செய்தால் எப்படி இருக்கும் ?
அங்கே போயி விஜயகாந்த் மப்புலே தன் சொந்த ஆளையே சுட்ருவானே உங்களுக்கு ஆசையா நந்தா ?