மலாய் உரிமைக்காகப் போராடும் பெர்காசா ஒரு முறை பைபிளை எரிக்கப்போவதாக மிரட்டியிருக்கலாம். ஆனாலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமைதிக்கும் இணக்கத்துக்குமான கிறிஸ்துவ அமைப்பு(சிபிஎச்எம்) அதன் தொடக்க விழாவுக்கு பெர்காசாவை அழைத்துள்ளது.
இன்றிரவு கோலாலும்பூர் மெஜெஸ்டிக் ஹோட்டலில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமையில் நடைபெறும் சிபிஎச்எம் தொடக்க விழாவுக்கு அழைப்பு கிடைக்கப்பெற்றதாக பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி கூறினார்.
“அந்த அமைப்பு அமைதியையும் நல்லிணக்கத்தையும் நாடுகிறது. எல்லாச் சமயங்களுடனும் உறவு வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். நான் அரசமைப்பைப் பின்பற்றுகிறவன். அதனால் தொடக்கவிழாவுக்குச் செல்வேன்”, என்றாரவர்.
பெர்காசாவிலிருந்து அறுவர் அவ்விழாவுக்குச் செல்வார்கள்.
இந்தப் புதிய அமைப்பு எந்தக் கட்சிக்கும் ஆதரவாக இருக்காது என்றும் நாட்டில் சமயங்களுக்கிடையில் ஓர் உறவுப் பாலமாக அது விளங்கும் என்றும் சிபிஎச்எம் தலைவர் அருள்திரு வொங் கிம் கொங் கூறினார்.
ஆனால், சில விமர்சகர்கள் பிஎன்னுக்கு ஆதரவு தேட உருவானதுதான் இப் புதிய அமைப்பு என்கிறார்கள்.
சிபிஎச்எம்-முக்கு பிஎன்னுடன் தொடர்புண்டா என்பது தமக்குத் தெரியாது என இப்ராகிம் கூறினார்.
“அவர்கள் பிஎன் ஆதரவாளர்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. நான் அவர்களின் விருந்தாளி, அவ்வளவுதான்”, என்றார்.
யாரை எங்கே வைக்கணும் என்று யாருக்கும் தெரியலே. அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும் வேதம் புரியலே.
……………..BN NUKKUM பெர்கசவுக்கும் அழிவு வெகு அருகாமையில்தான் உள்ளது
பொதுவாக கிறிஸ்துவ அமைப்புக்கள் அரசியல் சார்பாக செயல் படுவதில்லை. அப்படி செயல் படுவதற்கும் வாய்ப்பில்லை. ஆனால் புதிதாக ஒரு அமைப்பு என்று சொல்லும் போது இப்போது இருக்கின்ற அமைப்புக்கள் என்னவானது?
போய் பாருங்க அவங்க வைத்திருக்கும் பைபளில் அல்லாக் என்ற சொல்லிருந்தால் அதையும் எரிப்போம் என்று சொல்லி ஆர்ப்பாட்டம் செய்யுங்க சரிதானே..?