தொழிலுக்காக மத்திய கிழக்கு நாட்டுக்குச் சென்று திரும்பும் முன்னாள் போராளிகள் தொடர்ந்து கைது

ltteதொழிலுக்காக மத்திய கிழக்கு நாட்டுக்குச் சென்று இலங்கை திரும்பும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் இலங்கையின் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெறுகின்ற செயற்பாடு மக்கள் மத்தயில் அச்ச நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இரு தடவைகள் இலங்கைக்கு வந்து சென்றவர். மீண்டும் மூன்றாவது தடவையாக 30.05.2015 அன்று டுபாயிலிருந்து இலங்கைக்கு வரும் போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கைது செய்யப்பட்டவர் அம்பாறை மாவட்டம் காரைதீவு 12ஆவது பிரிவைச் சேர்ந்த கனகய்யா கருணாகரன் வயது 39  திருமணமாகி ஒரு குழந்தையின் தந்தையாவார்.

கடந்த ஐந்து வருடங்களாக மத்திய கிழக்கு நாட்டில் தொழிலுக்காக சென்றாலும் இலங்கைக்கு வந்து வந்து சென்றவர். இறுதியாக கடந்த வரும் 08ஆம் மாதம் டுபாய்க்குச் சென்றுள்ளார்.

இவர் 2004ம் ஆண்டு விடுதலைப் புலி அமைப்பிலிருந:து விலகியுள்ளார்.  பல தடவைகள் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

 

இதேவேளை, தற்போதைய அரசாங்கம் பதவியேற்று ஐந்து மாதத்திற்குள் இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காகச் சென்ற மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 16 இளைஞர்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்ததும் கைது செய்யப்பட்டு, பூஸா, வெலிக்கடை போன்ற தடுப்பு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

கடந்த 2004 ஆண்டு விடுதலைப் புலிகளின் அமைப்பிலிருந்து இலங்கையின் முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் வெளியேற்றப்பட்ட பின்னர், ஒரு சில போராளிகள் அந்த அமைப்பிலிருந்து விலகி தமது இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தார்கள்.

 

அதேபோன்று 2009 ஆண்டு இறுதி யுத்தத்தினர் பின்னர் இலங்கை இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படடவர்கள் சிலர் தொழில்வாய்ப்புக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றிருந்தார்கள்.

-http://www.search.ask.com

TAGS: