டாக்டர் மகாதிர் முகமட்டைவிட சரவாக்கின் வளர்ச்சிக்கு அதிகம் செய்துள்ளவர் என மாநில முதலமைச்சர் அடினான் சதேமால் புகழப்பட்டவரான பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை வரவேற்க இன்று காலை கூச்சிங் ஸ்டேடியம் பெர்பாடுவானில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர்.
“12 ஆயிரத்துக்கும் அதிகமானோர்” கூடியிருந்ததாக பெர்னாமா கூறியது.
நஜிப்பும் அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சூரும் சாதேம் அடினானுடன் காலை மணி 10.30க்கு அரங்கத்துக்குள் நுழைந்ததும் “நஜிப் வாழ்க” முழக்கம் வானைப் பிளந்தது.
பிரதமரின் வருகையையொட்டி பெர்பாடுவான் அரங்கமும் அதன் சுற்றுப்பகுதியும் விழாக் கோலம் பூண்டிருந்தன. காலை எட்டு மணியிலிருந்தே பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
அரங்கிலும் அதனைச் சுற்றியுள்ள முக்கிய சாலைகளிலும் ஆயிரக்கணக்கான ‘தராசு’(பிஎன்) கொடிகள் தொங்கவிடப்பட்டு பெரியதொரு “பிஎன் விழா” நடப்பதற்கான சூழலை உருவாக்கியிருந்தன.
கூடிய கூட்டமா? கூட்டிய கூட்டமா?
கூட்டிக் கொடுத்த கூட்டம்!.
அது கூட்டிய கூட்டம். சரவாக்கில் ஒரு புட்டி சாராயம் என்ன வெல்லாமோ செய்யும்-அதிலும் ஒரு அகோங்கின் ஒரு தாள் இன்னும் வேலை செய்யும். அங்குள்ள ஆதி வாசிகளுக்கு அரசியலைப்பற்றி அவ்வளவு அக்கறை கிடையாது -சிலரைத்தவிர. இங்குள்ள நம்மவர்கலைபோல் தான்.
திரு தேனி அவர்களே உங்கள் கருத்தை படித்து சிரிப்பை அடக்க
முடியல அருமை.அருமை.
சாந்தி அங்கே போயி கொடுத்து முன்னுக்கும் பின்னுக்கும் கூட்டி வந்திருப்பாளோ…………………