ஐ.எஸ் பயங்கரவாதிகள் நிகழ்த்தும் தாக்குதல்களில் ரசாயனப் பொருளான குளோரினை பயன்படுத்துவதாக அவுஸ்திரேலியா குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜூலி பிஷப் சனிக்கிழமை கூறியதாவது, நாம் சந்திக்கும் மிக ஆபத்தான சவால்களில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கமும் ஒன்று.
அவர்கள் குளோரினைப் பயன்படுத்துவதோடு, மேற்கத்திய நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து வல்லுநர்களைப் பணியில் அமர்த்துகின்றனர்.
இதனால் ரசாயன ஆயுதத் தயாரிப்பு மிகத் தீவிரமாக நடைபெற்று வருவது தெரியவந்துள்ளது.
ரசாயன ஆயுதங்களைத் தயாரிப்பதற்காக இன்னும் ஏராளமான வல்லுநர்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் பணியில் அமர்த்தக் கூடும்.
கடந்த 4 ஆண்டுகளாகவே சரின் மற்றும் குளோரின் ரசாயனப் பொருள்களை சிரியா அரசு பயன்படுத்தி வந்தது.
ஈராக் மற்றும் சிரியாவில் வீடுகளில் தயாரிக்கப்படும் வெடிகுண்டுகளில் குளோரின் சேர்க்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கார் வெடிகுண்டு, சாலையோர வெடிகுண்டுகளில் குளோரின் இருக்கிறது.
அணு ஆயுதங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் உள்ள விழிப்புணர்வு ரசாயன ஆயுதங்கள் குறித்து இல்லை.
20-ஆம் நூற்றாண்டில் பேரழிவை ஏற்படுத்திய ஆயுதங்களில் ரசாயனப் பயன்பாடு பெருமளவில் இருந்திருக்கிறது என்று ஜூலி பிஷப் தெரிவித்துள்ளார்.
-http://world.lankasri.com