செல்ஃபி புகைப்படத்தால் அமெரிக்காவிடம் சிக்கிய ஐ.எஸ் தீவிரவாதிகள்

isis_selfie_001உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் ஐ.எஸ் அமைப்பு செல்ஃபி புகைப்படத்தால் அமெரிக்காவிடம் சிக்கியுள்ளது.

ஐ.எஸ் பயங்கரவாதிகள் உலகம் முழுவதிலும் தங்கள் இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பதற்கு சமூக வலைதளங்களை முக்கிய கருவியாக பயன்படுத்தி வருகின்றனர்.

ஐ.எஸ் இயக்கத்தை பற்றி தெரிந்து கொள்வதற்காக ஆர்வத்துடன் சமூக வலைதளங்களில் ஐஎஸ் இயக்கத்தை தேடுபவர்களுக்கு அவர்கள் உடனடியாக பதில் அளிக்கிறார்கள்.

இது போன்று தேடுபவர்களின் கவனத்தை மேலும் ஈர்ப்பதற்காக அவர்கள் இதுவரை 1700 புகைப்படங்கள், வீடியோக்கள், கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பக்கத்தை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 200,000 ஐ தாண்டி உள்ளதாக ஏர் ஃபோர்ஸ் டைம்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இத்தகைய செயல்களால் சமூக வலைதளங்களில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பதிவுகளை அமெரிக்க படைகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

புளோரிடாவின் ஹல்பர்ட் பகுதியில் இயங்கி வரும் ஐ.எஸ் அமைப்பினர், செல்ஃபி ஒன்றை சமீபத்தில் பதிவு செய்துள்ளனர்.

இந்த செல்ஃபியை 22 மணிநேரத்திற்கு பிறகே அமெரிக்க படையினர் பார்த்துள்ளனர். அதனை வைத்து, சிரியாவில் அவர்களின் இருப்பிடத்தை கண்டுபிடித்த அமெரிக்க போர் விமானங்கள் உடனடியாக சென்று அவர்களை தாக்கி கொன்றதுடன், அந்த கட்டிடத்தையும் தாக்கி அழித்துள்ளனர்.

இந்த தாக்குதல் நடைபெற்ற போது ஐஎஸ்ன் ஜெ.டி.ஏ.எம்( மொத்தமாக நேரடியாக குண்டு போட்டு தாக்கும் படை)பிரிவைச் சேர்ந்த 3 பேர் இருந்ததாக அமெரிக்க படைகள் தெரிவித்துள்ளன.

-http://world.lankasri.com