ஹாடியின் சட்டவரைவுக்கு எதிராக தடுப்பாணை பெற நால்வர் முயற்சி

injunctionபொதுநலம்  கொண்ட  நான்கு  குடிமக்கள்  பாஸ் தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங் நாடாளுமன்றத்தில்  கொண்டுவரவுள்ள  தனி  உறுப்பினர்  சட்டவரைவை  அரசமைப்புக்கு  விரோதமானது  என்று  அறிவிக்கக்  கோரும்  மனுவை  கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றத்தில்  பதிவு  செய்துள்ளனர்.

மன்சூர்  சாஆட், அஸிரா  அசிஸ், ஹஸ்பீமபுத்ரா  அபு  பக்கர்,  ஹஸ்வானி  ஜமாலுடின்  ஆகிய  அந்நால்வரும்  அந்தத்  தனி  நபர்  சட்டவரைவை  மக்களவை  விவாதிப்பதைத் தடுக்க  தடுப்பாணை  விடுக்குமாறும்  நீதிமன்றத்தைக்  கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள்,   ஹாடி, மக்களவைத்  தலைவர், துணைத்  தலைவர். நாடாளுமன்றச் செயலாளர், துணைச்  செயலாளர்  ஆகியோரை  எதிர்வாதிகளாகக்  குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஹாடி, 1965 ஷியாரியா  நீதிமன்றச்  சட்டத்தை  வலுப்படுத்துவதற்காக  சர்ச்சைக்குரிய  சட்டவரைவு  ஒன்றை  மக்களவையில் பதிவு  செய்திருக்கிறார்.

அச்சட்ட  வரைவு,  ஆண்டுத்  தொடக்கத்தில்  கிளந்தான்  அரசு  மாநில  அளவில்  நிறைவேற்றி  வைத்துள்ள  ஹுடுட்  சட்டங்களை  நடைமுறைப்படுத்தும்  நோக்கம்  கொண்டது  என்பதை, பா\ஸ்  மறுத்தாலும்  அதுதான்  அதன் நோக்கம்  என்றே  பொதுவாகக்  கருதப்படுகிறது..