சீனாவில் கப்பல் மூழ்கிய விபத்தில் உயிரிழந்தோருக்கு நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
சீனாவின் யாங்ட்ஸி நதியில் கடந்த 1 ஆம் திகதி 456 பேருடன் சென்ற சொகுசு கப்பல், சூறாவளியில் சிக்கி கவிழ்ந்தது.
இதில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 431 ஆக அதிகரித்துள்ளது. இதில், 14 பேர் மட்டுமே அதிசயமாக உயிர் பிழைத்துள்ளனர்.
காணாமல் போன 11 பேரை, மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.இது கடந்த, 70 ஆண்டுகளில், சீனாவில் நிகழ்ந்த மிகப்பெரிய விபத்தாக கருதப்படுகிறது.
சீனாவில் இறந்தோருக்கு, ஏழாம் நாள் நினைவஞ்சலி அனுசரிப்பது வழக்கம். அதன்படி நேற்று, விபத்து நடந்த பகுதியான யாங்ட்ஸி நதிக்கரையில், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில், சீன போக்குவரத்து அமைச்சர் யங் சான்டங் பங்கேற்றார். இறந்தோரின் உறவினர்கள், நண்பர்கள், மீட்பு படையினர்,என, 1,400க்கும் அதிகமானோர் கூடி, மூன்று நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
-http://world.lankasri.com