உலகளவில் வரலாறு படைத்த மூதாட்டி: 102 வயதில் பி.எச்.டி பட்டம் பெற்று சாதனை!

syllm_rapoport_001ஜேர்மனியை சேர்ந்த 102 வயதான மூதாட்டி ஒருவருக்கு டொக்டர் பட்டம் வழங்கியுள்ளதால் சர்வதேச அளவில் அதிக வயதில் டொக்டர் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பெர்லின் நகரை சேர்ந்த Ingeborg Rapoport (102) என்பவர் ஹிட்லர் ஆட்சியின்போது 1937ம் ஆண்டு தனது மருத்துவ படிப்பை முடித்திருந்தார்.

பின்னர் கடந்த 1938–ம் ஆண்டில் ‘பி.எச்.டி.’ ஆராய்ச்சி பட்டப்படிப்பு மேற்கொண்டார்.

டொக்டர் பட்டம் பெறுவதற்கு மருத்துவ துறையில் ஆய்வுக்கட்டுரை (thesis) எழுதி தெரிவாக வேண்டும் என்பதால், அந்த காலத்தில் ஜேர்மனியை வாட்டி எடுத்த தொண்டை அழற்சி நோய் குறித்து ஆய்வுக்கட்டுரை எழுதி தெரிவானார்.

எனினும் ஜேர்மனியை நாஜி படைகள் ஆட்சி செய்தன. Ingeborg Rapoport-வின் தாயார் ஒரு யூதர் என்பதாலேயே அவருக்கு டொக்டர் பட்டம் வழங்க மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் அவரது முயற்சி தடைபட்டது.

இதற்கிடையே இரண்டாம் உலகப் போருக்கு பின் அங்கு நாஜிக்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.

அதன் பின்னர் இவர் தொடர்ந்து பி.எச்.டி. பட்டம் படிக்க முயன்றார். ஆனால், வாழ்க்கை மாற்றம் மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக அவரால் அதை படித்து முடிக்க முடியவில்லை. இருந்தும் அவர் விடாமல் தன்னம்பிக்கையுடன் படித்து வந்தார்.

தற்போது அவருக்கு 102 வயதாகிற நிலையில் சுமார் 80 வருடங்கள் டொக்டர் பட்டத்திற்காக காத்திருந்த அவருக்கு கடந்த மாதம் நல்ல செய்தி கிடைத்துள்ளது.

Hamburg பல்கலைக்கழகத்தில் உள்ள குறைகளை சரிசெய்த முனைவர்கள், அவருக்கு டொக்டர் பட்டம் வழங்குவது குறித்தான ஆய்வில் இறங்கினர்.

இதனை தொடர்ந்து அந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் பெர்லினில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து ஆய்வுக்கட்டுரை குறித்தான சமீபத்திய நிகழ்வுகளை அளியுங்கள் என கேட்டுள்ளனர்.

கடந்த மாதம் நடந்த நேரடி ஒப்புவித்தல் தேர்வில் வெற்றி பெற்று பி.எச்.டி. தேர்வில் வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து அவருக்கு ஹாம்பர்க் பல்கலைக்கழகம் நேற்று அவருக்கு டொக்டர் பட்டம் வழங்கியது.

பட்டமளிப்பு விழாவில் Ingeborg Rapoport பேசும் போது, தள்ளாத வயதில் பெற்றுள்ள இந்த பட்டம் எனக்காக அல்ல. சர்வாதிகாரிகளால் நீதி மறுக்கப்பட்ட அனைவருக்கும் கிடைத்ததாகவே கருதுகிறேன் என்றார்.

-http://world.lankasri.com