லிபியாவின் சிர்டே நகரை கைப்பற்றியதாக ஐ.எஸ். அறிவிப்பு

லிபியாவின் முக்கிய நகரமான சிர்டேவை, ஃபஜர் லிபியா படையினரிடமிருந்து கைப்பற்றியுள்ளதாக இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது.

உலக அளவில் பயங்கரவாதச் செயல்களைக் கண்காணித்து வரும் “சைட்’ அமைப்பு இந்தத் தகவலைத் தெரிவித்தது.
இதுகுறித்து “சைட்’ அமைப்பு செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:

சிர்டே நகரையும், அங்குள்ள மின் உற்பத்தி நிலையத்தையும் கைப்பற்றியுள்ளதாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் அறிவித்துள்ளனர்.

ஃபஜர் லிபியா படையினருடன் கடுமையான மோதலில் ஈடுபடும் காட்சிகள், மின் உற்பத்தி நிலையத்தை ஐ.எஸ். அமைப்பினர் நெருங்கும் காட்சி (படம்), ஃபஜர் லிபியா படையினரின் உடல்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன புகைப்படங்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர் என “சைட்’ அமைப்பு தெரிவித்தது.

லிபியாவின் முன்னாள் சர்வாதிகார ஆட்சியாளர் மம்மர் கடாஃபியின் சொந்த ஊர் சிர்டே என்பது குறிப்பிடத் தக்கது.

-http://www.dinamani.com