மியான்மரில் சித்திரவதைக்கு ஆளாகும் தமிழர்கள்

myamar_tamils_002மியான்மரில் வாழும் சிறுபான்மை சமூகத்தினரான தமிழர்களின் நிலைமை மோசமடைந்து வருவதாக, மலேசிய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மியான்மரில், கடந்த சில ஆண்டுகளில் சிறுபான்மை ரோஹிங்கியா முஸ்லீம் சமுகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் உள்நாட்டில் அனுபவித்த துன்புறுத்தல்கள் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறினர்.

அதைவிட மோசமான சூழ்நிலை, தற்போது மியன்மர் தமிழர்களிடையே நிலவுவதாக அந்த நாளிதழ் தெரிவிக்கிறது.

மியான்மரில் வாழும் தமிழர்களில் பெரும்பான்மையானோர் ஹிந்துக்களும், கிறிஸ்தவர்களும் ஆவர்.

அவர்களில் பலரை மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் செல்லும் இடைத்தரகர்கள், அங்கு கொத்தடிமைகளாக விற்றுவிடுவது அம்பலமாகியுள்ளது.

ரோஹிங்கியா, வங்கதேச குடியேறிகளுடன் சேர்த்து தமிழர்கள், ஒரே படகுகளில் அடைக்கப்பட்டு சுமார் 2 வாரங்களாக உணவு வழங்கப்படாமல் கடற்பயணம் செய்ய வைக்கப்பட்டனர்.

பின்னர், தாய்லாந்து, மலேசியா எல்லைப் பகுதிகளில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மியான்மர் தமிழர்களில் பலர், தங்களுடைய சொத்துகளை விற்று இடைத்தரகர்களுக்கு கொடுத்ததாகவும், இறுதியில் மலேசியாவின் பினாங்கு, கெடா, பெர்லிஸ் மாகாணங்களின் கட்டுமானத் தலங்களில் கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டதாகவும் தெரிகிறது என்று அந்த நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-http://www.dinamani.com

ஆள்கடத்தல் கும்பலிடம் சித்திரவதைபடும் மியான்மர் தமிழர்கள்! அதிர்ச்சி தகவல் அம்பலம்

கோலாலம்பூர்: மியான்மரில் வசிக்கும் தமிழர்கள், ஆட்கடத்தல் கும்பலிடம் சிக்கி கஷ்டப்பட்டுவரும் தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது. மியான்மரில் (பர்மா) வாழும் தமிழர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள். இலங்கைக்கு தமிழர்கள் வியாபாரம், வேலைவாய்ப்புக்காக பெருமளவில் இடம் பெயர்ந்ததை போல மியான்மருக்கும் ஒரு காலத்தில் அதிகம் பேர் இடம் பெயர்ந்தனர்.

தடோன், பாமோ மாவட்டங்களில் பெருமளவில் நெல் பயிரிடும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், மலேசியாவுக்கு சென்றால் நல்ல வேலை கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டி அவர்கள் கொத்தடிமைகளாக விற்பனை செய்யப்படுகிறார்கள் என்று செய்தி வெளியிட்டுள்ளது ஸ்டார் பேப்பர் என்ற நாளிதழ்.

அகதி அந்தஸ்து இல்லை மியான்மரில் அடக்குமுறைக்கு ஆளாகி அண்டை நாடுகளில் அடைக்கலம் புகும் ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்காவது, மலேசியாவில். அகதிகள் என்ற அந்தஸ்து கிடைக்கிறது.ஆனால், தமிழர்களுக்கு, அது கூட கிடைப்பதில்லை என்ற தகவலையும் அந்த பத்திரிகை வெளியிட்டுள்ளது.

காடுகளில் அடைப்பு பணத்தை வசூலித்துக் கொண்டு, மியான்மரில் இருந்து ரோஹிங்யாவினருடன், தமிழர்களையும், வங்கதேசத்தை சேர்ந்தவர்களையும், படகில் கொண்டு செல்லும் ஆள்கடத்தல் கும்பல், வியட்னாம், தாய்லாந்து கரையோர காடுகளில், இறக்கி விடுகின்றனர். பின், அங்குள்ள ரகசிய முகாம்களில் அடைத்து வைத்து, மேலும் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். கையில் உள்ள கொஞ்ச நஞ்ச பணத்தையும், அந்த கும்பலிடம் பறிகொடுக்கும் தமிழர்கள் மட்டும் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இப்படி சென்றவர்களும் மலேசியாவின் கேதா, பெர்லிஸ் மாகாணங்களில், கட்டுமான பணி செய்கின்றனராம். குழிதோண்டி புதைப்பு பணம் கொடுக்காதவர்களை அடித்து, உதைத்து, மியான்மரில் உள்ள உறவினர்களிடம் மொபைல் போனில் பேசச் செய்து, பணத்தை வசூலிக்கிறது அந்த கும்பல்.

அப்படியும் பணம் வரவில்லையென்றால், உணவு, தண்ணீர் தராமல், முகாம்களில் அடைத்து வைத்து சாகவிடுகின்றனர். இறந்தவர்களை, அங்கேயே குழி தோண்டி புதைத்து விடுகின்றனர்.

நாடு திரும்ப பயம் இவர்கள் நிலை இப்படி என்றால், மலேசியாவிற்கு சென்று கட்டுமானப் பணி செய்யும் மியான்மர் தமிழர்களுக்கு, அகதிகள் என்ற அந்தஸ்து கூட தர, அகதிகளுக்கான, ஐ.நா. துதரகமான, யு.என்.எச்.சி.ஆர். மறுக்கிறது. ஒரு குழுவில் சென்ற, 110 தமிழர்கள், நாடற்றவர்களாக, மலேசியாவில் உள்ளனர்.

அவர்கள், அடையாள அட்டையின்றி மியான்மர் திரும்பினால், சுட்டுக் கொல்லப்படலாம் எனவும் பயப்படுகின்றனர். அதே நேரத்தில், மலேசியா அதிகாரிகளின் கெடுபிடிகளையும் தாங்க முடியாமலும் தவிக்கின்றனர். இளம் பெண் கதறல் இதுகுறித்து, மலேசியா வந்த பரிமளா, என்ற 21 வயது தமிழ் பெண் கூறுகையில், ”கடந்த ஆண்டு, மியான்மர் அரசு, அடையாள அட்டை வழங்குவதாக அறிவித்தது.

அடையாள அட்டை இல்லாத நாங்கள் திரும்பினால், மியான்மரில் எங்களை சுட்டுக்கொலை செய்துவிடுவார்கள் என்று பயப்படுகிறோம்” என்றார்.

tamil.oneindia.com