ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்த பெண்கள்: எங்களிடம் வந்துவிடுங்கள் என கண்ணீர் விடும் கணவர்கள்

isis_family_001ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்ததாக சந்தேகிக்கப்படும் 3 பெண்களின், கணவர்கள் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளனர்.

பிரித்தானியாவின் பிராட்போர்ட பகுதியை சேர்ந்த சகோதரிகளான சுக்ரா தாவுத், ஷொஹ்ரா தாவுத், மற்றும் காதிஜா தாவுத் தங்களது குழந்தைகளுடன் கடந்த மாதம் மெதினாவுக்கு புனித யாத்திரை சென்றனர்.

இந்நிலையில் அவர்கள் வரும் வியாழன் பிரித்தானியா திரும்பவேண்டும். ஆனால் அவர்கள் கடந்த 9ஆம் திகதி விமானம் மூலம் துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது.

அவர்களது தம்பி சிரியாவில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களும் ஐ.எஸ் அமைப்பில் இணைந்திருக்கலாம் என்று அச்சம் எழுந்துள்ளது.

இது குறித்து லண்டனில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் 3 சகோதரிகளின் கணவன்கள் கண்ணீர் மல்க கூறியதாவது, நாங்கள் உங்களை நேசிக்கிறோம். உங்களை இழந்து தவிக்கிறோம் திரும்பி வாருங்கள் என உருக்கமாக அழைப்பு விடுத்துள்ளனர்.

சுகாராவின் கணவர் அக்தர் இக்பால் கூறுகையில், நான் கலங்கி போய் இருக்கிறேன். நான் உன்னை பிரிந்து நீண்டநாள் ஆகிவிட்டது.

நீங்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறீர்கள் என எனக்கு தெரியபடுத்துங்கள் என தனது மனைவி மட்டும் குழந்தைகளை கேட்டு கொண்டுள்ளார்.

கதிஜாவின் கணவர் மொகமத் ஷோகிப் கூறுகையில், எங்களுக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆகி விட்டது. நாங்கள் மகிழ்ச்சியாகத்தான் வாழ்ந்து வந்தோம். நாங்கள் அழகான குடும்பமாக இருந்தோம், நான் உங்களை இழந்து வாடுகிறேன் என கூறியுள்ளார்.

-http://world.lankasri.com