குணப்படுத்த முடியாத நோயினால் அவதிப்படும் நோயாளிகளை மருத்துவர்களின் உதவியுடன் ‘கருணை கொலை’ செய்வது தொடர்பான புதிய மசோதா ஒன்று ஜேர்மனி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் சான்சலரான ஏஞ்சலா மெர்கெலின் Christian Democratic Union (CDU) கட்சியும் அதன் கூட்டணி கட்சியான Social Democratic Party(SPD)ஆகிய இரண்டு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
மசோதாவை தாக்கல் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒருபோதும் குணப்படுத்த நோயினால் பாதிக்கப்பட்ட, மோமா நிலைக்கு தள்ளப்பட்ட, அல்லது தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும் நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவர்கள் உதவியுடன் கருணை கொலை செய்வதை சட்டமாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், Bavaria நகரம் உள்பட ஜேர்மனி நாட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கருணை கொலை செய்வது நடைமுறையில் உள்ளது என்றும், ஆனால், இந்த நடைமுறைக்கு Berlin உள்ளிட்ட சில நகர மருத்துவமனைகளில் தடை விதிக்கப்பட்டுள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, நோயாளிக்கும் அவரது குடும்பத்திற்கு தொடர் இன்னல்களை கொடுப்பதை தவிர்க்கும் நோக்கில் இந்த நடைமுறையை நாடு முழுவதும் சட்டமாக்க வேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், ஜேர்மனியின் Federal Medical Chamber (BÄK) கட்சி தலைவரான Frank Ulrich Montgomery என்பவர் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியபோது, எந்த ஒரு நோயாளியும் மருத்துவர்களால், அவர்களின் கைகளாலேயே இறக்கும் நிலை ஏற்படக்கூடாது. மாறாக, ஒரு நோயாளி தானாக இறக்கும் தருவாயில் அதற்கு மருத்துவர்கள் உதவி செய்யலாம் என குறிப்பிட்டுள்ளார்.
ஜேர்மனியில் உள்ள பிற கட்சிகள், கருணை கொலை செய்வதை சட்டமாக்கிவிட்டால், அதனை செய்யும் மருத்துவர்கள் தங்களுடைய வருமானத்தை பெருக்கி கொள்ளும் நோக்கில் செயல்படாத வகையில் சட்டத்தை உருவாக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் ஒப்பதலுக்காக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் இந்த மசோதா தொடர்பான முதல் ஆலோசனை கூட்டம் எதிர்வரும் யூலை 2ம் திகதி நடைபெறும் என்றும், அதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறும் என அரசு வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
-http://world.lankasri.com