சூடான் அதிபர் தப்பிச் செல்ல அமைதிப் படையினர் பிணைக் கைதிகளாக்கப் பட்டனர்?

சமீபத்தில் இனப் படுகொலை குற்றச்சாட்டு அடிப்படையில் சூடான் அதிபர் ஒமர் அல் பஷீர் மீது கைது உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்ததுடன் அவர் நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதித்திருந்தது ஹகுவே இலுள்ள சர்வதேச குற்றத் தடுப்பு நீதிமன்றம்.

ஆனால் பஷீர் நீதிமன்ற உத்தரவைப் பொருட்படுத்தாது தென்னாப்பிரிக்காவுக்குத் தப்பிச் சென்றிருந்தார்.

இவ்வாறு பஷீர் தப்பிச் சென்றதற்கு உதவியாக சூடான் தலைநகர் டர்ஃபுரில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஐ.நா அமைதிப் படையினரைப் பிணைக் கைதிகளாக சூடான் இராணுவம் பிடித்து வைத்திருந்ததாகச் சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன. ஆனால் இசெய்தியை இன்று செவ்வாய்க்கிழமை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது ஐ.நா சபை. குறித்த நீதி மன்றத் திர்ப்புக்கு முன்பு தற்போது தென்னாப்பிரிக்காவின் ஜொஹன்னாஸ்பேர்க் நகரில் நடைபெற்று வரும் ஆப்பிரிக்க யூனியன் உச்சி மாநாட்டில் உத்தியோகபூர்வமாகப் பங்கு பெற முடிவு செய்திருந்த பஷீர் திங்கட்கிழமை அங்கு தப்பிச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பஷீர் தமது நாட்டில் பதுங்கி இருக்கும் இடத்தில் இருந்து வெளிவர வேண்டும் எனத் தென்னாப்பிரிக்கா அவகாசம் வழங்கியுள்ளது. சூடானில் இனப் படுகொலையின் கொல்லப் பட்ட சுமார் 3 இலட்சம் மக்கள் இறப்பு தொடர்பில் சர்வதேச நீதிமன்றம் ஏற்கனவே 2009 இலும் பின்னர் 2010 இலும் பஷீர் மீது கைது உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த இனப்படுகொலையைத் தொடர்ந்து ஐ.நா மற்றும் ஆப்பிரிக்க யூனியன் கூட்டமைப்பான UNAMID துருப்புக்கள் 2007 ஆம் ஆண்டு முதல் டர்ஃபுரில் பிரவேசித்து செயலாற்றி வருகின்றன.