விமானத்தின் அடிப்பகுதியில் தொங்கிக்கொண்டு பயணித்த நபர்கள்: நடுவானில் நிகழ்ந்த விபரீதம்

flight_001பிரித்தானியா நாட்டை சேர்ந்த விமானத்தின் அடிப்பகுதியில் ஒளிந்துக்கொண்டு பயணம் செய்த இரண்டு நபர்களில் ஒருவர் கீழே விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த British Airways 747 jet என்ற விமானம் நேற்று ஆப்பிரிக்காவில் உள்ள Johannesburg நகரிலிருந்து புறப்பட்டுள்ளது.

ஆனால், விமானம் புறப்படுவதற்கு முன்பாகவே விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரியாமல் இரண்டு நபர்கள் அந்த விமானத்தின் அடிப்பகுதியில்  ஒளிந்துள்ளனர்.

லண்டனில் உள்ள Heathrow விமான நிலையத்திற்கு புறப்பட்ட அந்த விமானம் சுமார் 8,000 மைல்களை கடந்து லண்டனின் Richmond நகருக்கு மேலே பறந்துக்கொண்டிருந்தது.

சுமார் 11 மணி நேரங்கள் பறந்த விமானத்தின் அடிப்பகுதியை பற்றிக்கொண்டு பயணித்த அந்த இரண்டு நபர்களில் ஒருவர் திடீரென பலத்தை இழந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பல நூறு அடிகள் மேலே பறந்துக்கொண்டிருந்த அந்த விமானத்திலிருந்து கை தவறிய அந்த நபர், Richmond நகரிலிருந்த ஒரு அலுவலக கட்டிடத்தின் கூரை மீது பலத்த சத்தத்துடன் விழுந்துள்ளார்.

விமானம் தரையிறங்கியவுடன் இரண்டாவதாக பயணித்த மற்றொரு நபர், விமானத்தின் ஓடுபாதையில் விழுந்தத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் அதிகாரிகளுக்கு தகவல் அளித்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதே நேரத்தில், ஆகாயத்திலிருந்து ஒருவர் தங்களுடைய அலுவலக கட்டிட கூரை மீது விழுந்துள்ளதாக வந்த புகாரில் அந்த இடத்திற்கு பொலிசார் விரைந்து சென்றுள்ளனர்.

அப்போது, அலுவலக கூரையில் இருந்த மின்சார பெட்டி மீது விழுந்த நிலையில் அவர் மிக மோசமாக இறந்திருந்தார்.

சடலத்தை கைப்பற்றிய பொலிசார் அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்த நபருக்கும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபருக்கும் 20லிருந்து 25 வயதிருக்கும் என தெரிவித்த பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமானத்தில் ஒளிந்தப்படி பயணித்த இறப்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல.

இதுவரை இவ்வாறு சட்டவிரோதமாக பயணித்து உயிரிழந்த மற்றும் ஆபத்தான நிலையில் வந்தடைந்த பயணிகளின் விபரம்:

1. 2012ம் ஆண்டு அங்கோலா நாட்டிலிருந்து லண்டனை சேர்ந்த விமானத்தில் தொற்றிக்கொண்டு வந்த 26 வயது வாலிபர் இது போல கை தவறி விழுந்து இறந்தார்.

2. 2013ம் ஆண்டு இஸ்தான்பூலிருந்து வந்த British Airways விமானத்தில் மறைந்துக்கொண்டு வந்த நபர் ஒருவர், விமானம் தரையிறங்குவதற்கு சற்று முன்னர் கீழே விழுந்து உயிரிழந்தார்.

3. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் ஹாவாயிலிருந்து புறப்பட்ட விமானத்தில் பள்ளி சிறுவன் ஒருவன் அதன் சக்கரப்பகுதியில் ஒளிந்துக்கொண்டு -62C குளிரை தாங்கிக்கொண்டு தரையிறங்கி உயிர் பிழைத்துள்ளான்.

4. இந்தாண்டு ஏப்ரல் மாதம் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்றி 21 வயது நபர் ஒருவர் விமானத்தின் சக்கர பகுதியில் ஒளிந்துக்கொண்டு பயணித்து அதிசயாக தரையிறங்கி உயிர் பிழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com