அதிகரிக்கும் துப்பாக்கிச்சூடு சம்பவம்: கவலையில் ஒபாமா

obama_feel_001அமெரிக்காவில் கறுப்பு இன மக்கள் மீது வெள்ளை இனத்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி வரும் சம்பவங்கள், சமீப காலமாக அதிகரித்து வருவது குறித்து ஜனாதிபதி ஒபாமா கவலை தெரிவித்துள்ளார்.

தெற்கு கரோலினா மாகாணத்தில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் கடந்த புதன்கிழமையன்று வெள்ளை இன வாலிபர் ஒருவர் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இந்த சம்பவத்தில் தேவாலய பாதிரியார் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவில் மிகப்பெரும் அதிர்ச்சியை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜனாதிபதி ஒபாமாவுக்கு மிகப்பெரும் கவலையும், கோபத்தையும் இந்த சம்பவம் ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அவர் கூறியதாவது, இது போன்ற மிகப்பெரும் வன்முறை சம்பவங்கள், மற்ற வளர்ந்த நாடுகளில் நடைபெறவில்லை என்பதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும் என்று கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த துப்பாக்கிச்சூடு முட்டாள்தனமானது என்று தெரிவித்த அவர், இது போன்ற குற்றங்களை தடுக்க மீண்டும் ஆயுதம் மூலம் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இது போன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த, தேர்தலின்போது சரியான தலைவர்களை தெரிவுசெய்யுமாறு ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

-http://world.lankasri.com

பிறந்த நாள் பரிசாக கிடைத்த துப்பாக்கி:தேவாலயத்துக்குள் புகுந்து 9 பேரை சுட்டுக்கொன்ற வாலிபன் (வீடியோ இணைப்பு)