பக்கத்தான் ரக்யாட் கூட்டணி இன்னும் உண்டு என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் கூறுவதை அக்கட்சியின் பாஸ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் முகம்மட் சாபு ஏற்கவில்லை.
பாஸ், டிஏபி, பிகேஆர் மூன்றும் உருவாக்கி 12வது பொதுத் தேர்தலில் பெருமைப்படத்தக்க வெற்றியைப் பதிவு செய்த கூட்டணி இப்போது இல்லை. இதுவே இன்றைய அரசியல் நிதர்சனம் என முகம்மட் கூறினார்.
“பக்கத்தான் உடைந்து போனது. அது செத்துவிட்டது என்றாலும் அல்லது மயங்கிக் கிடக்கிறது என்றாலும் உடைந்து விட்டது என்பதே உண்மை.
“அது இன்னும் இருக்கிறது என்று அவர்( அப்துல் ஹாடி) கூறினால் அதற்கான விளக்கத்தை அவரிடம்தான் கேட்க வேண்டும். என்னைப் பொருத்தவரை பக்கத்தான் இப்போது இல்லை”, என்றாரவர்.
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமான் என்பது பாஸ் கட்சி தலைவருக்கும் நன்கு பொருந்தும். இஸ்லாமிய கட்சியின் தலைவராக இருந்துக் கொண்டு, பக்காத்தானின் ஒருமித்த கொள்கையை திரித்துக் கூறி, செய்த தவறை இஸ்லாமிய ஜுபபாக்குள் மறைத்து, மக்களின் நம்பிக்கைக்கு மாறாக செயல்பட்டு, உண்மையான இஸ்லாம் கொள்கையை அவமதிப்பதுதான் இந்த தலைவரின் சாதனையோ??? செய்த தவறினை உணர்ந்து மன்னிப்பு கேட்பவனே மனிதன்!!!!
நன்றாகச் சொன்னீர் சிற்றெரும்பு. எப்படி மக்கள் கூட்டணியில் இருந்துக் கொண்டு அக்கூட்டணியை ஹாடி பிரித்தாரோ அதைப் போல கூடவே இருந்து பாஸ் கட்சியை மாட் சாபு நன்றாகவே உடைக்கின்றார்.
கஷ்டபட்டு உருவாகிய கூட்டனியை உடைத்த ஹடி அவர்களை மக்கள் மன்னிக்ச்மாத்டார்கள் ஹடிகு இடி விழ போகிறது அடுத்த தேர்தலில்.
முற்போக்கு பாஸ் ஆதரவாளர்களும் தலைவர்களும் பாஸ்மாவுடன் இணைந்து புதியதோர் கட்சியை அமைத்து, பி கே ஆர் மற்றும் டி எ பி உடன் கூட்டு அமைத்தாராயின், முதுகில் குத்திய உலாமா நம்பிக்கைத் துரோகிகளுக்கு நல்ல பாடமாகவும் அமையும், மக்களின் நம்பிக்கையும் புதிய கூட்டணி மீது ஓங்கும்!! சாபா சரவாக் எதிர்கட்சிகளும் என் ஜி ஒக்கலும் இந்த புதிய கூட்டணியில் கீழ் ஒன்றிணைந்து 14வது பொதுத் தேர்தலைஎதிர்கொள்ளலாம். கூட இருந்தே கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதே ஹாடியின் குள்ளநரி நோக்கம் போல் தெரிகிறது. அம்நோவுடன் கூட்டு சேர்ந்து “கேதுவானான் மெலாயு” கொள்கையை நிலைக்கச் செய்ய பகடைக் காயை நகர்த்துவதுபோல் தெரிகிறது!!! இல்லையேல், கூட்டணிக்கு ஆதரவான பெரும்பாலான முற்போக்குத் தலைவர்களை அண்மையில் பாஸ் தேர்தலில் வீழ்த்தப்பட்டதேனோ??? ஹூடுத் விவகாரம் என்பது இங்கு வெறும் காரணக் கதையே! ஏனெனில், அம்னோவும் இதற்கு வெளிப்படையாக ஆதரவு தர மறுக்கிறது!!!!
எது எப்படியோ ! பாஸ் கட்சியை உடைக்க எண்ணி இருந்த அம்னோவின் லட்சியம் நிறைவேறி விட்டது ! ஹுடுட் விவகாரத்தால் பாஸ் விளங்காமல் போய் விட்டது ,
கூட இருந்து கொண்டே பாஸ் துணை தலைவர் என்னைத்த உடைத்தார், கட்சி தான் அவரை இழந்து விட்டதே.