அமெரிக்காவில் தேவாலயத்தில் புகுந்து இனவெறி தாக்குதல் நடத்திய வாலிபர் வீடியோ கான்பிரன்சிங் மூலம் நீதிபதியின் முன் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
அமெரிக்காவின் தென் கரொலினா பகுதியில் உள்ள பாரம்பரிய இமானுவேல் ஏஎம்இ தேவாலயத்தின் உள்ளே டைலன் ரூப் என்ற 21 வயது வாலிபர் ஒருவர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இதில் பாதிரியார் உட்பட 9 பேர் பலியாகியானர். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை உருவாக்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உள்ளிட்ட பல தலைவர்கள் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளர்.
இதனிடையே நேற்று முந்தினம் பொலிசார் ரூப்பை கைது செய்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட அவரிடம் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நீதிபதி விசாரணை நடத்தினார்.
துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களில் உறவினர்கள் அவரிடம் பேசுகையில், நாங்கள் உன்னை மன்னித்துவிட்டோம் ஆனால் நீ செய்த தவறை நினைத்து வருந்த இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ளவேண்டும் என்று கூறினர்.
இதையடுத்து அவனிடம் பெயர், வயது போன்ற விடயங்களை நீதிபதி கேட்டார்.
பின்னர் இந்த வழக்கை ஒக்டோபர் மாதம் ஒத்திவைத்த அவர் மேலும், மூன்றாம் கட்ட விசாரணையை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்துள்ளார்.
இந்நிலையில் ரூப்பின் நண்பர்கள் இந்த சம்பவம் தொடர்பாக கூறியதாவது, அவன் இந்த தாக்குதலுக்காக கடந்த ஆறு மாதங்களாகவே திட்டமிட்டு வந்தான். மேலும் கருப்பர்கள் இந்த உலகம் முழுவதையும் ஆக்கிரமித்துள்ளனர்.
எனவே வெள்ளையர்களின் நன்மைக்காக புது போரை தொடங்கிவைக்கவுள்ளேன் என்று அடிக்கடி கூறினான் என தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தென் கரொலினாவின் கவர்னர் நீக்கி ஹாலி இது குறித்து பேசுகையில், ரூப்புக்கு மரண தண்டனை கிடைக்க வலியுறுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டைலன் ரூப்பை பொலிசார் பிடிப்பதற்கு மிகவும் உதவி செய்த அவரது சகோதரி அம்பர் ரூப் தனது சகோதரனின் இந்த கொடூர செயலை முன்னிட்டு வரும் ஞாயிறன்று தனக்கு நடக்க இருந்த திருமணத்தை திடீரென நிறுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-http://world.lankasri.com